கலாநிதி மாறன் – ரஜினி கூட்டணியில் வசூலில் சம்பவம் செய்த திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

Rajini
Rajini

தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக இருக்கும் ரஜினி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் வெளிவந்து வெற்றி நடை கண்டு வருகிறது.  இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துடன் ரஜினி இதற்கு முன்பு எந்தெந்த படத்தில் இணைந்துள்ளார் பற்றி விலாவாரியாக பார்ப்போம்..

1. எந்திரன்  : ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் 100 கோடி பட்ஜெட்டுக்கு மேல் எடுத்தது ஆனால் படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

2. பேட்ட : விசுவாசம் படத்தை எதிர்த்து ரஜினியின் பேட்ட படம் களம் இறங்கியது இந்த படத்தை மிக பிரம்மாண்ட பொருள் செலவில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்தது படம் முழுக்க முழுக்க  ரசிகர்களுக்கான படமாக இருந்ததால் வெளிவந்து நன்றாக ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலில் 240 கோடிக்கு மேல்  அள்ளியது.

3. அண்ணாத்த : சிறுத்தை சிவா உடன் கூட்டணி அமைத்து ரஜினி நடித்த திரைப்படம் இது இந்த படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் படமாக உருவாகியது படத்தில் ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, பிரகாஷ்ராஜ் என மிகப் பெரிய பட்டாளமே நடித்திருந்தது படம் வெளிவந்த குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடியது 170 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 180 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

4. ஜெயிலர் : ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து அனைத்து இடங்களிலும் வெற்றி நடை கண்டு வருகிறது 200 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை மட்டுமே 600 கோடிக்கு மேல் வசூல் அள்ளி உள்ளது வருகின்ற நாட்களிலும் இந்த படத்தின் வசூல் குறையப்போவதில்லை என கூறப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றியால் சந்தோஷம் அடைந்த தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அவர்கள் ரஜினிக்கு ஒரு கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ எக்ஸ் 7 சீரிஸ் காரை பரிசாக கொடுத்தார் அதேபோல இயக்குனர் நெல்சன் ஒரு கோடி மதிப்பிலான சொகுசுகாரை பரிசாக கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.