அப்படி எல்லாம் சும்மா விட்டுடுவோமா.. காஸ்ட்லி காரை கொடுத்து திக்கு முக்காட வைத்த கலாநிதி மாறன்

ஜெயிலர் இந்த அளவுக்கு மாபெரும் வரவேற்பை பெற்று இண்டஸ்ட்ரியல் ஹிட் அடிக்கும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். நினைத்ததை விட பல மடங்கு அதிகமாக கிடைத்த லாபத்தால் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் இப்போது இறக்கை இல்லாமல் பறந்து கொண்டிருக்கிறார்.

அந்த அளவுக்கு ஜெயிலர் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தை வேற லெவலுக்கு கொண்டு சென்றிருக்கிறது. அந்த உற்சாகத்தில் இருக்கும் கலாநிதி மாறன் தற்போது பல பரிசுகளை கொடுத்து ரஜினியை ஆச்சரியப்படுத்தியுள்ளார். அதில் லாபத்தில் ஒரு பங்கை செக்காக அவர் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது.

அந்த சூடு அடங்குவதற்கு முன்பாகவே பி எம் டபிள்யூ காரை பரிசளித்து ரஜினிக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஷாக் கொடுத்தார் கலாநிதி மாறன். அது சம்பந்தப்பட்ட போட்டோக்களும், வீடியோக்களும் வைரலாகி வரும் நிலையில் தற்போது நெல்சனுக்கும் அவர் விலை உயர்ந்த காரை கொடுத்து சந்தோஷப்படுத்தி இருக்கிறார்.

ரஜினிக்கு கலாநிதி மாறன் கார் பரிசளித்த உடனே இயக்குனருக்கு ஒன்றும் கிடையாதா என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில் தற்போது கலாநிதி மாறன் நெல்சனிடம் ரக ரகமான கார்களை காட்டி பிடித்ததை தேர்ந்தெடுங்கள் என்று கூறியிருக்கிறார்.

அதைத்தொடர்ந்து நெல்சன் Porsche மாடல் காரை தேர்வு செய்திருக்கிறார். அந்த காரின் சாவியை கலாநிதி மாறன் நெல்சனுக்கு வழங்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. அதன் விலை மட்டுமே 90 லட்சத்திற்கு மேல் இருக்கும் என்கின்றனர்.

ஜெயிலர் வெற்றிக்கு மிகப்பெரும் காரணமாக இருந்த நெல்சனை தயாரிப்பாளர் கண்டுக்காமல் போய்விடுவாரோ என பல விமர்சனங்கள் எழுந்தது. ஆனால் நாங்கள் அப்படியெல்லாம் சும்மா விட்டுவிட மாட்டோம் என்று சொல்லும் வகையில் இப்படி ஒரு பரிசை கலாநிதி மாறன் கொடுத்திருக்கிறார். உண்மையில் இது நெல்சனுடைய உழைப்பிற்கு கிடைத்த சரியான பரிசு என ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.

nelson-kalanithi
nelson-kalanithi