மானாட மயிலாட கோகுலின் மனைவி இவர்தான்.! இதோ குடும்ப புகைப்படம்

விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் ஒன் என்ற நிகழ்ச்சியை ஒளிபரப்பி தங்கள்  டிஆர்பி யை அதிகரிக்க செய்தார்கள். அதே போல் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சி மூலம் ஒட்டு மொத்த மக்களையும் கவர்ந்தார்கள். அந்த  நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட பலரும் தற்போது பிரபலமாகி விட்டார்கள்.

அந்த வகையில் கோகுல் என்பவரும் மானாட மயிலாட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர். இவர் ஒரு மிமிக்ரி ஆர்டிஸ்ட் இவரின் திறமையை பார்த்து தான் கலா மாஸ்டர் இவருக்கு வாய்ப்பு கொடுத்தார். கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டார் கோகுல். மானாட மயிலாட நிகழ்ச்சியில் இவர் நடனத்தை விட பல வித்தியாசமான வித்தைகளை காட்டி மக்களை வெகுவாக கவர்ந்தார். நடனம்,ஜிம்னாஸ்டிக், பிட்னஸ் மேஜிக் என பல்வேறு வித்தைகளை காட்டி வந்தார்.

gokul
gokul

அதேபோல் கோகுல் வெள்ளித்திரையிலும் அம்புலி என்ற திரைப்படத்தில் மிருகமாக  நடித்திருந்தார். மேலும் மகளிர் மட்டும் ஜம்புலிங்கம் 3d, போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார் அதேபோல் இவரை தமிழ் பிக்பாஸ் குரலுக்கு சொந்தக்காரர் என பலரும் நினைத்தது உண்டு மானாட மயிலாட நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் பலரும் நடனம் ஆடி ரசிகர்களை கவர்வார்கள் ஆனால் நடனமாடுவது மட்டுமல்லாமல் வித்தியாசமாக தனது திறமையை நிரூபித்துக் காட்டிநார்.

மேலும் இவர் நாளைய இயக்குனர் கலக்கப்போவது யாரு என பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். இந்த நிலையில் கோகுல் குட்டா என்ற டேலண்ட் அகடமி ஒன்றை நடத்திவருகிறார் இவரது அகடமியில்  படிக்கும் மாணவர்கள் கின்னஸ் சாதனையும் செய்துள்ளார்கள். இந்த நிலையில் கோகுள் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

gokul
gokul

Leave a Comment