உங்களுக்கு அவ்வளவு தான் லிமிட்.. மீனாவிடம் வாங்கி கட்டிக்கொண்ட கலா மாஸ்டர்

Meena
Meena

Meena : குழந்தை நட்சத்திரமாக நடித்து பின் ஹீரோயின்னாக  என்ட்ரி கொடுத்து வெற்றிகளை அள்ளியவர் மீனா இவர் ரஜினி, ராஜ்கிரன், கார்த்தி, சத்யராஜ், அஜித்  என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து மிகப்பெரிய ஒரு உச்சத்தை எட்டினார்.

தொடர்ந்து வெற்றி நடிகையாக ஓடிக்கொண்டிருந்த மீனா திடீரென பிரபல தொழிலதிபர் வித்தியாசகரை திருமணம் செய்து கொண்டார் இவர்கள் இருவருக்கும் நைனிகா என்ற மகள் பிறந்தார்.  திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வந்தனர்.

யார் கண் பட்டதோ மீனா கணவருக்கு அடிக்கடி  உடம்பு சரி இல்லாமல்  போனது திடீரென  இறந்தும் விட்டார் அதன் பிறகு மீனா வீட்டிலேயே முடங்கினார். மீனாவின் நெருங்கிய சினிமா தோழிகள் மற்றும் அவருடைய அம்மா கொஞ்சம் கொஞ்சமாக அவரை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தனர்.

இப்பொழுது இயல்பு நிலைக்கு திரும்பி உள்ள மீனா படங்களிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார் தற்போது மலையாள படம் ஒன்றில் கமிட் ஆகி இருக்கிறார். இந்த நிலையில் பேட்டி ஒன்றில் கலா மாஸ்டர் மீனா குறித்து பேசி உள்ளார் அவர் சொன்னது.. ஒருமுறை மீனா உனக்கு சின்ன வயசு தான் ஆகிறது உனக்கு வருங்காலத்தில் ஒரு துணை வேண்டும்..

Kala Master
Kala Master

எனவே நீ இரண்டாவது திருமணம் செய்து கொள் எனக் கூறினேன் இதைக் கேட்டு கடுப்பான மீனா “அக்கா உங்க வேலைய பாத்துட்டு போங்க” எனக்கு ஒரு மகள் இருக்கிறாள் இனி நான் அவளைப் பற்றி தான் யோசிக்கணும் என இரண்டாவது திருமணத்தில் விருப்பம் இல்லை என பேசி விட்டதாக கூறினார்.