காக்காமுட்டை திரை படத்தில் நடிப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை.! அப்பொழுது அப்படி கூறிவிட்டு இப்பொழுது பீல் பண்ணும் பிக்பாஸ் நடிகை.

0

2014ஆம் ஆண்டு ஐஸ்வர்யா ராஜேஷ், ரமேஷ், ஜே விக்னேஷ், தனுஷ் ஆகியோர்கள் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் காக்காமுட்டை. இந்த திரைப்படத்தை தனுஷ் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ்,  வெற்றிமாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பனி ஆகிய இருவரும் இணைந்து தயாரித்து இருந்தார்கள் படத்தை மணிகண்டன் என்பவர் இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அதிக வசூலை ஈட்டியது. அதுமட்டுமில்லாமல் காக்கா முட்டை திரைப்படம் பல்வேறு சாதனைகளையும் செய்தது  பல விருதுகளையும் தட்டிச் சென்றது. காக்காமுட்டை திரைபடத்திற்காக தேசிய விருது கிடைத்தது மேலும் இந்த திரைப்படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்களுக்கு நல்ல புகழை பெற்றுக்கொடுத்தது.

இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் இளம் வயதிலேயே இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்ற கதாபாத்திரத்தை ஏற்று மிகவும் தைரியமாக நடித்து இருந்தார். அதனால் அனைவரிடமும் பாராட்டை பெற்றார் அப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் இந்த திரைப்படத்தில் நடிக்க முடியாது என கூறியுள்ளார் பிரபல நடிகையும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமான ரித்திகா.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியதாவது நான் திரையுலகிற்கு வந்து இரண்டாவது திரைப்படமே காக்கா முட்டை திரைப்படம் கிடைத்தது. ஆனால் பலரும் இந்த திரைப் படத்தில் என்னை நடிக்க வேண்டாம் எனக் கூறினார்கள். அதனால் அந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு எனக்கு உடன்பாடு இல்லை. எனக்கு பிறகு பல பேரிடம் இந்த கதையை இயக்குனர் கூறியுள்ளார் கடைசியாக தான் ஐஸ்வர்யா ராஜேஷ் அவர்கள் நடித்தார் வெளியாகிய பிறகு அய்யய்யோ இந்த திரைப்படத்தை தவறவிட்டு விட்டோமே என நான் நிறைய முறை பீல் செய்தேன்.

மேலும் அவர் கூறியதாவது அந்த திரைப்படத்தை பார்க்கும் பொழுது இந்த திரைப்படத்தில் நாம் நடித்த இருந்தால் நன்றாக இருந்திருக்கும் இருந்தாலும் பரவாயில்லை என நினைத்துக் கொள்வேன். மேலும் அந்தத் திரைப்படத்திற்கு பிறகு தான் எனக்கு மெட்ராஸ் திரைப்படம் அமைந்தது என கூறியுள்ளார்  மெட்ராஸ் திரைப்படமும் நல்ல அறிமுகத்தை பெற்றுக் கொடுத்தது எனவும் அந்த பேட்டியில் கூறினார்.