எனக்கு வந்த வாய்ப்பை தட்டிப் பறித்தார் காஜல்..! பல வருடம் கழித்து ரகசியத்தை உடைக்கும் தமன்னா.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா இவர் முதலில் ரன், கேடி என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகமானார் அதன் பின் தமிழ் சினிமா உலகில் அயன், வீரம், தேவி, படிக்காதவன் போன்ற பல்வேறு சிறந்த வெற்றி படங்களை கொடுத்தவர். இப்படி அதிக ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

மேலும் ஒரு சமயத்தில் தமிழை தாண்டி கன்னடம் தெலுங்கு ஹிந்தி என பிற மொழிகளிலும் நடித்து பிரபலமடைந்தார்  சினிமா உலகில் எவ்வளவு வெற்றியை ருசித்தார்களோ அதே அளவிற்கு ரசிகர்களையும் கவர்ந்து இழுக்க அரைகுறையான ஆடையில் இருக்கும் புகைப்படங்களையும் அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் .

இப்பொழுது கூட புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுகிறார் மேலும் புதிய படங்களில் நடித்தும் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் பேட்டி ஒன்றில் நடிகை தமன்னா சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். தமன்னாவிடம் சில கேள்விகள் கேட்டுள்ளனர் அப்பொழுது நீங்கள் எதையாவது ஒரு படத்தை மிஸ் செய்ததற்கு வருதப்பட்டு உள்ளீர்களா என கேட்டுள்ளனர் அதற்கு அவர் ஆமாம் எனக் கூறி உள்ளார்.

நடிகர் பிரபாஸ் மற்றும் காஜல் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் மிஸ்டர் ப்ராஜெக்ட் அதில் காஜல் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தவற விட்டு உள்ளார் தமன்னா. அதற்காக இன்றுவரை நினைத்து வருத்தப்பட்டு வருகிறார் என கூறினார் மேலும் அதை பலமுறை படத்தின் இயக்குனர் தசரத்திடம் கூறியுள்ளாராம்

மேலும் அந்தப் படத்தில் காஜல் கதாபாத்திரம் பாடல் மற்றும் அந்த படமே தமன்னாவிற்கு ரொம்ப பிடித்த படமாம். மேலும் பேசிய அவர் நானும் சுருதிஹாசனும் நல்ல நண்பர்கள் நாங்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும்படி வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் நடிப்போம் அந்த படம் ஒரு ஆக்சன் திரைப்படமாக இருக்க வேண்டும் என கூறினார்.

 

Leave a Comment

Exit mobile version