கணவருடன் ரொமான்டிக்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட காஜல் அகர்வால்.!! சமூக இடைவெளி தேவை என பதிவிடும் ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம்.

kajal agarwal with her husband romantic pictures viral: நடிகை காஜல் அகர்வால் தொழிலதிபர் கௌதம் கிச்சிலு என்பவரை காதலித்து பெற்றோர்களின் சம்மதத்தோடு கடந்த 3 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணம் மிக பிரமாண்டமாக மும்பை தாஜ் ஹோட்டலில் இவர்களுக்கென மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்ட கொலு மண்டபத்தில் நடந்தது. மேலும் இவர்களின் திருமணத்திற்கு முக்கியமான சொந்தங்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

மேலும் நடிகை காஜல் அகர்வால் திருமணம் முடிந்த கையோடு தங்களுக்கு என கட்டிய புதிய வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான் நடந்துள்ளது. அந்த கிரகப்பிரவேசத்திற்கு 2 வீட்டை சார்ந்தவர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து திருமணத்திற்கு பிறகு இவர் தனது கணவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அணிந்திருக்கும் மஞ்சள் நிற புடவையை திரைப்பட ஆடை வடிவமைப்பாளரான மனீஷ் மல்ஹோத்ரா அவர்கள் வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்கள் ஒன்றாக இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கிண்டலாக சமூக இடைவெளி தேவை என பதிவிட்டுள்ளனர். இதோ அந்த புகைப்படங்கள்.

Photo by Kajal Aggarwal on November (2)
Photo by Kajal Aggarwal on November (2)
Photo by Kajal Aggarwal on October
Photo by Kajal Aggarwal on October
Photo by Kajal Aggarwal on November (2)
Photo by Kajal Aggarwal on November (2)
Photo shared by Kajal Aggarwal on (3)
Photo shared by Kajal Aggarwal on (3)
Photo by Kajal Aggarwal on November (1)
Photo by Kajal Aggarwal on November (1)

Leave a Comment