தனது கணவருடன் இருக்கும் குழந்தையை வெளி உலகத்திற்கு காட்டிய காஜல் அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்

0
Kajal Agarwal
Kajal Agarwal

தமிழ் சினிமாவில் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் நடிகை காஜல் அகர்வால் இவர் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பல மொழிகளில் கூட நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான மாற்றான், துப்பாக்கி போன்ற திரைப்படங்களின் மூலம்  ரசிகர்கள் மனதில் இடம் பெற்றுள்ளார.

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த  மெர்சல் என்ற  திரைப்படம் அவருக்கு நல்ல பெயரையும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்று தந்தது. மேலும் இவர் கௌதம் கிட்ச்லு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இவர் இந்த ஆண்டில் அழகான ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.  அந்த ஆண் குழந்தைக்கு நீல் கிட்ச்லு என்ற பெயரைவைத்துள்ளார் என்று சமூக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருகிறார்கள்.

மேலும் அவர் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு வருகிறார். காஜல் அகர்வால் அம்மாவான பின்பே அவரது கடமைகளை சரியான முறையில் கடைப்பிடித்து வருவதாக கூறியுள்ளார்.

அவரது கணவரின் தோலில் அவரது  மகன் தூங்கும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

kajal agarwal
kajal,agarwal