கையில் சரக்குடன் காஜல் அகர்வால்.! ஒருவேளை கொரோனாவை கிண்டல் செய்கிறாரோ.?

தமிழ் சினிமாவில் 2008 ஆம் ஆண்டு வெளிவந்த பழனி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து அவர் சரோஜா, பொம்மலாட்டம், மோதி விளையாடு, நான் மகான் அல்ல, மாற்றான், மெர்சல், விவேகம் ,மாரி போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார்.அதை தொடர்ந்து அவர் பல இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமில்லாமல் சமீபகாலமாக தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வலம் வந்த காஜல் அகர்வால் தற்பொழுது முன்னணி இயக்குனரான சங்கர் அவர்கள் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் உலகநாயகன் கமலுக்கு ஜோடியாக தற்போது கமிட்டாகி நடித்து வருகிறார்.

சமிபத்தில் இந்தியன் 2 படத்தில் விபத்து ஏற்பட்டது இந்த நிலையில் எல்லோரும் அச்சத்தில் இருந்து வந்த நிலையில் காஜல் அகர்வால் தண்ணீரில் குத்தாலம் அடிக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார் இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இயல்பு நிலைக்கு திரும்பியது சந்தோசமாக உள்ளது என கூறினர் மற்றொரு பக்கம் இந்த நிலையில் இது தேவையான ரசிகர்கள் ஒரு பக்கம் கேள்வி எழுப்பியும் வந்தனர்.

கொரோனா வைரஸினால் உலகமே அதிர்ந்து உள்ளது. இங்கே முன்னெச்சரிக்கை நடவடிக்கையை இந்திய அரசும் தமிழக அரசும் விழிப்புணர்வுகளை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா நம்மை பாதிக்காமல் இருப்பதற்காக கை கொடுக்காமல் இருப்பதும் இரும்பல் தும்மலில் இருந்து விலகி இருப்பதும் கைகளை அடிக்கடி சானிடைசர்ஸ் போட்டு சுத்தம் செய்வதாகும்.

இந்தநிலையில் காஜல் அகர்வால் மது கிண்ணத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்து ரசிகர்கள் கொரோனா வைரஸை கிண்டல் பண்றீங்களா எனவும் கேள்வி எழுப்பி வந்துள்ளனர்.

ஏனென்றால் சானிடைசர்களில் ஆல்கஹால் அதிகமாக இருப்பதாக சொல்லப்படுகிறது.

kajal
kajal

Leave a Comment