கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கூட தனது ரசிகர்களுக்காக போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்ட காஜல் அகர்வால்.! எப்படி இருக்கிறார் பாத்தீங்களா.!

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் அதிகம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்த நடிகைகளில் ஒருவர்தான் நடிகை காஜல்அகர்வால் இவர் தமிழ்,தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்று விளங்கினார் இவருக்கு கடந்த வருடம் கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெற்றது என்பது நமக்கு தெரிந்த விஷயம்தான்.

அதிலும் குறிப்பாக இவரது திருமணம் மிகவும் சிம்பிளாக முடிந்துவிட்டது ஏனென்றால் அப்போது சூழ்நிலை இவருக்கு அப்படி அமைந்துவிட்டது.மேலும் இவர் திருமணத்திற்குப் பிறகு அதிகமாக திரைப்படங்களை கைப்பற்றி நடிக்கவில்லை என்றாலும் ஒரு சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார் இருப்பினும் தற்பொழுது இவர் கர்ப்பமாக இருக்கும் நிலைமையில் திரைப்படங்களில் நடிக்காமல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட ஆரம்பித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஜல் அகர்வால் கர்ப்பமாக இருக்கிறார் என ஒரு தகவல் வைரலாகி வந்தது இதனை உறுதி செய்யும் வகையில் கௌதம் தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கிறார் என்று ரசிகர்களுக்கு அறிவித்தார்.

மேலும் கடந்த வாரம்தான் காஜல் அகர்வாலுக்கு விமரிசையாக வளைகாப்பு நடைபெற்றது என தகவல் கிடைத்தது இருப்பினும் காஜல்அகர்வால் அதுபற்றி எந்த ஒரு புகைப்படங்களையும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிடவில்லை தற்பொழுது அவர் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வாலுக்கு குழந்தை பிறந்த பின்பு இவர் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டால் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என சமூக வலைதள பக்கங்களில் கமெண்ட் பதிவு செய்து வருகிறார்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment