கணவருடன் இரவு பார்ட்டியில் கும்மாளம் போடும் காஜல் அகர்வால்.!

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்த நடிகைகளில் முக்கியமான நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால் இவர் தமிழ் திரையுலகில் பழனி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதனைத் தொடர்ந்து மாவீரன் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி விட்டார் என்றுதான் கூறவேண்டும்.

மாவீரன் திரைப்படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களால் தற்பொழுது வரை பாராட்டப்பட்டு வருகிறது அந்த அளவிற்கு மிக அற்புதமாக நடித்திருப்பார் அதனைத் தொடர்ந்து இவர் தமிழ் திரை உலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் இணைந்து நடித்து தனக்கென ஒரு இடத்தையும் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தையும் புதிதாக உருவாக்கிக் கொண்டார் அவ்வாறு இவர் ஜில்லா,விவேகம்,மாறி,மெர்சல் போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவரது திருமண வாழ்க்கையில் மும்பையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டு மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் காஜல் அகர்வால் தனது கணவருடன் இருக்கும் ரொமான்ஸ் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி விடுவார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்தான்.

சமீபத்தில் கூட இவரது நீச்சலுடை புகைப்படம் சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வந்தது கல்யாணத்திற்குப் பிறகும் இவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிடுகிறார் என பல ரசிகர்களும் கமெண்ட் பதிவு செய்து வந்தார்கள்.

இந்நிலையில் காஜல் அகர்வால் நடிப்பில் தற்பொழுதும் ஒரு சில திரைப்படங்கள் உருவாகி வருகிறது திருமணத்திற்கு பிறகு பலரும் சினிமாவில் நடிப்பதில்லை ஆனால் இவரது நடிப்பில் தற்பொழுது இந்தியன்2, பாரிஸ் பாரிஸ் போன்ற படங்கள் உருவாகி வருகிறது.

kajal
kajal

இதனைத்தொடர்ந்து காஜல் அகர்வால் தனது கணவருடன் மிகவும் நெருக்கமாக இரவு பார்ட்டியில் இருக்கிறார் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எவ்வளவு அழகாக ரொமான்ஸ் செய்கிறார் என கூறி வருகிறார்கள்.

Leave a Comment