பாடல் இல்லை, ஹீரோயின் இல்லை கைதி திரைவிமர்சனம்.!

0
kaithi
kaithi

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் கைதி, இந்த திரைப்படத்தில் பாடல்கள் எதுவும் இல்லை லவ் இல்லை ரொமான்ஸ் இல்லை, எனக் கூறி தான் படக்குழு விளம்பரப்படுத்தியது, இப்படி வித்தியாசமாக எடுத்துள்ள கைதி திரைப்படத்தை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

படத்தின் கதை

போலீஸ் போதை பொருள் கடத்தும் கும்பலிடம் இருந்து அதிக அளவு போதைப்பொருளை பறிமுதல் செய்து அதை ரகசிய இடத்தில் பதுக்கி வைக்கிறார்கள் இது அனைத்தும் நரேன் தலைமையிலான டீம் தான் செய்கிறது, அதை எப்படியாவது மீட்க வேண்டும் என வில்லன் கும்பல் அதிக அளவில் ஆட்களை அனுப்புகிறது, அந்த போதை பொருளை எடுத்து வர.

அதே சமயத்தில் பத்து வருடங்கள் கழித்து ஜெயிலில் இருந்து தனது மகளை பார்க்க ஆசை ஆசையாக வெளியே வருகிறார் கார்த்தி, ஆனால் அவரை சந்தேகத்தின் பெயரில் ஜீப்பில் ஏற்றுகிறார்கள் போலீஸ், அதன் பிறகும் போலீஸ் அதிகாரிகள் அனைவரும் ஒரு சூழ்ச்சியால் சிக்கிக் கொள்கிறார்கள் உயிர்போகும் நிலையில் போராடுகிறார்கள், அந்த நேரத்தில் கார்த்தி உதவினால் மட்டுமே அவர்களை காப்பாற்ற முடியும் என்ற நிலை.

கார்த்தி அவர்களுக்கு உதவினாரா எப்படி உதவினார், அதில் வரும் தடங்களை அனைத்தும் எப்படி தகர்த்தார் பத்து வருடம் கழித்து தனது மகளைப் பார்த்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

படத்தில் ஒன் மேன் ஆர்மியாக படம் முழுவதும் தாங்கி நிற்பது கார்த்தி மட்டும்தான், முதல் முறையாக தனது மகளை பார்க்க போகிறேன் என்ற ஏக்கத்தில் இருக்கும் தந்தை, மகளுக்காக நல்ல வாழ்க்கை அமைத்து தரவேண்டும் என பேசும் அப்பாவாக கார்த்தி தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார், அதேபோல் நரேன் போலீஸ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக நடித்துள்ளார், கார்த்தியின் மகளாக பேபி மோனிகாவும் தனது க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

படத்தில் எந்த இடத்திலும் சலிப்பு தட்டாமல் இரண்டாவது ஹீரோவாக லோகேஷ் கனகராஜ் திரைக்கதை அமைந்துள்ளது, ஆரம்பத்திலிருந்து இறுதி வரை நம்மை த்ரில்லாக வைத்துள்ளது, படம் முழுக்க ஆக்ஷன் என்றாலும் இடையே சென்டிமென்ட் காட்சிகளும் பூர்த்தி செய்கின்றன. அதேபோல் படம் முழுக்க இரவில் நடப்பது போல் எடுத்துள்ளார்கள் ஒளிப்பதிவாளர், சண்டைக் காட்சிகள் மிகவும் அற்புதமாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பின்னணி இசையில் சிஎஸ் சாம் பின்னி பெடல் எடுத்து விட்டார், படத்தில் எந்த பாடலும் இல்லை என்பதால் தனது முழு திறமையையும் பின்னணி இசையில் காட்டிவிட்டார், படத்தில் நான்கு வில்லன்கள் இருந்தாலும் அன்பு என்ற ரோலே தவிர மற்ற வில்லன்களுக்கு அழுத்தம் இல்லை மெயின் வில்லனுக்கும் கார்த்திக்கும் எந்த சம்பந்தம் என்பதை இரண்டாம் பாகத்திற்கு கொடுத்துவிட்டார் லோகேஷ் கனகராஜ்.

சில இடங்களில் மெதுவாக திரைக்கதை நகரும் போல் தோன்றுகிறது, படத்தில் எந்த ஒரு பில்டப் மாஸ் காட்சிகள் இல்லாமல் படு ரியலாக எடுத்து இருந்தாலும் ஆங்காங்கே சில லாஜிக் குறைகள் இருக்கின்றன.

கைதி கார்த்தியின் அடுத்த வெற்றி: 3/5