கைதி திரைப்படத்தின் ரீமேக்கில் நான் தான் நடிக்கிறேன்.!சும்மா கெத்தாக அறிவித்த பிரபல நடிகர்.!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சென்ற வருடம் தீபாவளிக்கு பிகில் திரைப்படத்துடன் போட்டிபோட்டு வெளியாகிய திரைப்படம் கைதி, இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.

குறைந்த பட்ஜெட்டில் எடுத்த திரைப்படம் என்பதால் அதிக லாபத்தை ஈட்டியது, மேலும் இந்த திரைப்படத்தின் கதை தந்தை மகளுக்கு இடையே நடக்கும் கதை ஆகும், அதுமட்டுமல்லாமல் போதைப்பொருட்களை ரவுடிகளிடம் இருந்து எப்படி அழிக்கிறார்கள் என்பதுதான் படத்தின் மையக் கருத்து.

இந்த திரைப்படத்தில் நடிகை கிடையாது பாடலும் கிடையாது தமிழ் சினிமாவில் முற்றிலும் மாறுபட்ட புதிய உத்தியை கடைபிடித்து வெற்றி கண்டார்கள் இந்த திரைப்படத்தின் மூலம். இதனால் இந்த திரைப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவெடுத்துள்ளார்.

ஹிந்தி ரீமேக்கில் இந்த திரைப்படத்தில் அக்ஷய குமார் அல்லது அஜய் தேவ்கான் நடிக்க இருக்கிறார்கள் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது, இந்த நிலையில் கைதி  திரைப்படத்தில் அஜய்தேவ்கான் நான் தான்  கைதி படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கப் போகிறேன் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தை அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி வெளியிட இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.

Leave a Comment