கைதி படத்தை பார்த்து மிரண்டுபோன பாலிவுட்.! ரீமேக்கில் யார் நடிக்கப் போகிறார் தெரியுமா.! எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தகவல்

தமிழ் சினிமாவில் எப்பொழுதும் வித்தியாசமான திரைப்படத்திற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அந்த வகையில் கடந்த வருடம் தீபாவளிக்கு வெளியாகிய கைதி திரைப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமைந்தது.

இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தான் இயக்கியிருந்தார், இந்த திரைப்படத்தின் சிறப்பு என்னவென்றால் படத்தில் பாடல்கள் எதுவும் கிடையாது நடிகையும் கிடையாது, இந்த நிலையில் கைதி திரைப்படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருக்கிறார்கள், அதற்கான பணிகள் மிகவும் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

கைதி திரைப்படத்தை பாலிவுட் முன்னணி நடிகர்களான அமீர்கான் மற்றும் அக்ஷய்குமார் படத்தை பார்த்து மிரண்டு உள்ளார்கள், இதில் அக்ஷய்குமார் படத்தின் கதையை கேட்டுவிட்டு ஓகே சொல்லியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. மேலும் நடிகர்கள் பற்றிய பேச்சுவார்த்தை பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அந்த திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. மேலும் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்து உள்ளார்கள் தயாரிப்பு நிறுவனம். மேலும் இயக்குனர் மற்றும் நடிகர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்கள்.

Leave a Comment