கைதி திரைப்படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகர் தான்.! யார் அந்த நடிகர் தெரியுமா.?

0

மாநகரம் என்ற திரைப்படத்தை இயக்கி வெற்றி கண்டவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இந்த திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர், இதனைத் தொடர்ந்து கார்த்தியை வைத்து தற்போது கைதி என்ற மற்றொரு திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் ரசிகர்களிடம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்று இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது, இந்த நிலையில் கைதி திரைப்படம் ஒரே இரவில் நடக்கும் சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையாக  உருவாகியுள்ளது.

மேலும் தற்பொழுது வரை கைதி திரைப்படம் சுமார் 80 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன விரைவில் 100 கோடியை கடக்கும் என மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது, கைதி திரைப்படத்தில் கார்த்தி தான் நடித்துள்ளார் ஆனால் கைதி  திரை படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளன.

கைதி திரைப்படத்தில் முதலில் நாயகனாக நடிக்க இருந்து பிரபல வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தானாம் அவரை மனதில் வைத்துதான் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கதை எழுதியுள்ளார் அதன்பின்னர்தான் கார்த்தியை ஒப்பந்தம் செய்துள்ளார், பின்பு கார்த்திக்கு ஏற்றவாறு கதையில் சற்று மாற்றம் செய்து படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.