கைதி – 2 சின்ன பட்ஜெட் படம் கிடையாது..? டில்லியை எதிர்த்து மோதும் பிரபல நடிகர்..! முதல் முறையாக வாய் திறந்து பேசிய கார்த்தி..!

karthi
karthi

நடிகர் கார்த்தி விருமன் படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி கோலாகலமாக வெளியாக இருக்கிறது அதற்கு முன்பாக படத்தை பெரிய அளவில் ப்ரோமோஷன் செய்து வருகிறது.

படக்குழு குறிப்பாக இந்த படத்தில் நடித்துள்ள கார்த்தி, திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் போன்றவர்கள் தமிழ்நாடு, கேரளா என அனைத்தையும் சுற்றி சுற்றி பிரமோஷன் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மும்பை சென்று இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கின்ற நிலையில் கார்த்தி  பேட்டி கொடுத்தார்.

அப்பொழுது பொன்னியின் செல்வன் படம் பத்தியும் கேட்கப்பட்டது அது குறித்து பல தகவல்களை பகிர்ந்தாலும் கடைசியாக கைதி 2 படம் குறித்தும் கேள்வி கேட்டனர் அதற்கும் அளித்துள்ளார் அதில் அவர் சொல்லி உள்ளது என்னவென்றால் கைதி 2 படம் கண்டிப்பாக வரும்.. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தற்போது விஜயின் தளபதி 67 பட வேளையில் பிஸியாக உள்ளார்.

இதனால் அந்த படத்தின் பிரீ ப்ரோடெக்ஷன் வேலைகள் முடிந்த பிறகு தான் கைதி 2 படபிடிப்பு தொடங்கும் இதனால் அடுத்த ஆண்டு 2023ல் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது என கூறினார் மேலும் கைதி படத்தை விட கைததி இரண்டாவது பாகம் 10 மடங்கு பெரிய பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக கார்த்தி கூறினார்.

இந்த படத்தில் டில்லி மற்றும் ரோலக்ஸ் ஆகிய இருவருமே மோத உள்ளனர் எனவும் கார்த்தி கூறி உள்ளார் அதன் காரணமாக இந்த படத்தை பெரிய பட்ஜெட்டில் எடுக்க பட குழு திட்டமிட்டுள்ளதாக தெரிய வருகிறது. கார்த்தி இந்த தகவலை கூறி உள்ளதால் ரசிகர்கள் தற்பொழுது கொண்டாடி வருகின்றனர் மேலும்  ரசிகர்கள் கைதி 2 இப்பொழுதே பெரிய அளவில் எதிர் நோக்கி காத்துக்கொண்டிருக்கின்றனர்.