எங்ககிட்ட வச்சு கிட்டா அருவாள தான் எடுப்போம்.! வெளியானது ஆர்கே சுரேஷ் நடித்துள்ள காடுவெட்டி திரைப்படத்தின் டீஸர்.!

தமிழ்சினிமாவில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் சமீபகாலமாக பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் இவர் நடிப்பில் விசித்திரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் ஆர்கே சுரேஷ் தற்போது காடுவெட்டி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது நாங்க கையில அருவாளை வச்சிருக்கவங்கள கும்புடுறவங்கடா என்கிட்ட வச்சிக்கிட்டா அருவாளை தான் எடுப்போம் என்ற வசனத்துடன் டீசர் ஆரம்பமாகிறது  முழுக்க முழுக்க அதிரடி ஆக்ஷன் காட்சிகள்  கிராமத்து பின்னணியில் உருவாகி உள்ளது.

இந்த திரைப்படத்தில் உண்மை சம்பவம் ஒன்றை கையில் எடுத்துள்ளதாக தெரிகிறது அதனால் கண்டிப்பாக இந்த திரைப்படம் மிகப்பெரிய சர்ச்சையை சந்திக்கும் அதுமட்டுமில்லாமல் சமூக பிரச்சனையை கையில் எடுத்துள்ளதால் இந்த திரைப்படத்திற்கு எதிர்ப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுங்க தான் கிடைச்சுதா  என்ற மாஸ் பஞ்ச் வசனம் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த திரைப்படத்தில் சுப்பிரமணியம் சிவா ஆடுகளம் முருகதாஸ்  எனர் பலர் நடித்துள்ளார்கள். படத்தை சோலை ஆறுமுகம் என்பவர் இயக்கியுள்ளார்.

வணக்கம் தமிழ் சாதிக் இசையில் ஜான் ஆப்ரகாம் படத் தொகுப்பு புகழேந்தி ஒளிப்பதிவில் இப்படம் உருவாகியுள்ளது மேலும் இந்த திரைப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் முக்கிய கட்சி கொடியை காட்டி உள்ளதால் மிகப்பெரிய சர்ச்சையை சந்திக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment