காதலுக்கு மரியாதை திரைப் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த இளம் நடிகர் தான்.! அச்சச்சோ மிஸ் பண்ணிட்டாரே உச் கொட்டும் ரசிகர்கள்

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் உலக சினிமாவிலும் ஒரு நடிகர் தவறவிட்ட படங்களை மற்றொரு நடிகர் நடித்து மாபெரும் வெற்றி அடைந்துள்ளதை நாம் அடிக்கடி பார்த்து வருகிறோம். அந்த வகையில் நடிகர் விஜய், அஜித், சூர்யா, விக்ரம் ஆகியவர்கள் தவறவிட்ட படங்களில் மற்றொரு நடிகர் நடித்து வெற்றி அடைந்து இருக்கிறது.

அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தில் திருப்பு முனையாக இருந்த திரைப்படம் காதலுக்கு மரியாதை. இந்த திரைப்படமும் வேறொரு நடிகர் இடமிருந்து விஜய்க்கு கைமாறிய திரைப்படம்தான்.1997ஆம் ஆண்டு வெளியாகிய காதலுக்கு மரியாதை திரைப்படம் மாபெரும் வெற்றி திரைப்படமாக அமைந்தது.

காதலுக்கு மரியாதை திரைப்படம் மலையாளத்தில் வெளியான அணியதிப்ராவு என்ற மலையாள திரைப்படத்தின் ரீமேக் தான் தமிழில் காதலுக்கு மரியாதையாக எடுத்தார்கள். இந்த திரைபடத்தை ஃபாசில் என்ற இயக்குனர் இயக்கியிருந்தார்.இந்த திரைப்படத்தை தமிழில் இயக்க முடிவு எடுத்தபோது நடிகர் அப்பாஸ்ஸிடம்தான் முதலில் நடிப்பதற்கு அணுகினாராம். ஆனால் அப்பாஸின் மேனேஜர் சரியான நிர்வாகம் செய்யாததால் கால்ஷீட் குழப்பம் செய்துவிட்டார்.

அதனால் அப்பாஸ் காதலுக்கு மரியாதை திரைப்படத்தில் நடிக்க முடியாமல் போனது.அதன் பிறகுதான் இயக்குனர் விஜய்யை அனுகி இந்த திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைத்தார். காதலுக்கு மரியாதை திரைப்படத்திற்கு முன்பு விஜய் நடிப்பில் வெளியாகிய நேருக்கு நேர், ஒன்ஸ்மோர், லவ் டுடே, ஆகிய திரைப்படங்களை விட காதலுக்கு மரியாதை திரைப்படம் மாபெரும் வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமல்லாமல் இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் என்ற தமிழ்நாடு மாநில விருதையும் விஜய் பெற்றார்.

Leave a Comment