காதல் திரைப்படத்தில் நடித்த சந்தியாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா.?

0

2004 ஆம் ஆண்டு பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடிப்பில் வெளியாகிய திரைப்படம் காதல், இந்த திரைப்படத்தின் மூலம் தான் சந்தியா முதன்முதலாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார், தனது முதல் திரைப்படத்தால் அசாத்திய நடிப்பால் அனைத்து ரசிகர்களையும் கட்டிப்போட்டவர். குறைந்த செலவில் எடுக்கப்பட்ட திரைப்படம் மிகப்பெரிய ஹிட்டடித்தது.

இந்த திரைப்படத்தில் நடித்த காதல் சந்தியா தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. கதைத் தேர்வு செய்வதில் சொதப்பியதால் சினிமாவில் இருந்து தள்ளப்பட்டார். இனி சினிமா வேலைக்கு ஆகாது என எண்ணி 2015ஆம் ஆண்டு சென்னையை சேர்ந்த சந்திரசேகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

திருமணமாகி ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது, குழந்தை பிறந்த பிறகு ஒரு புதுவிதமான நோயால் அவதிப்பட்டு வருகிறார் சந்தியா குழந்தை பிறந்த சில நாட்களிலேயே போஸ்ட்பார்டம் புளுஸ்(postpartum blues)என்ற மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் மாலை 5 மணி முதல் 7 மணி வரை காரணமில்லாமல் அழுது கொண்டே இருப்பார்.

sandhya
sandhya

இப்படி இருந்த சந்தியா தற்பொழுது அந்த நோயிலிருந்து தனது குடும்பத்தின் ஆதரவால் முற்றிலும் விடுபட்டு விட்டார். தற்பொழுது குடும்ப வாழ்க்கையை மிகவும் சந்தோஷத்துடன் வாழ்ந்து வருகிறார்.