காதல் படத்தில் நடித்த சிறுவனின் பரிதாப நிலை.! இப்பொழுது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.

இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் பரத் சந்தியா நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதல். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வசூல் சாதனை செய்தது. அது மட்டுமல்லாமல் அந்த ஆண்டிற்கு சிறந்த திரைப்படத்திற்காக பிலிம்பேர் விருதையும் பெற்றது.

இந்த படத்தில் பரத் அவர்கள் மெக்கானிக் செட்டில் வேலை செய்து வருகிறார். அதேபோல் நடிகை சந்தியா பள்ளி பெண்ணாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் சந்தியா அவர்கள் பரத்தை காதலித்து வருகிறார் ஆனால் பரத் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தனது முழு நேரத்தையும் வேலை செய்து வருகிறார்.

அதன் பிறகு ஒரு கட்டத்தில் சந்தியா மீது பாரத்துக்கும் காதல் ஏற்படுகிறது அந்த சமயத்தில் சந்தியா வீட்டில் அவருக்கு வேறொரு மாப்பிள்ளையை பார்க்கிறார்கள் அதை அறிந்த சந்தியாவும் பரத்தும் அந்த ஊரை விட்டு தலைமறைவாகிறார்கள். பின்னர் அவர்களை தேடி கண்டுபிடித்து இருவரையும் சேர்த்து வைப்பதாக கூறி சந்தியாவை வேறு ஒரு மாப்பிள்ளைக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். அதே போல் பரத்தை துன்புறுத்தி  சித்திரவதை செய்து அவரை பைத்தியமாக்கி விடுகிறார்கள் பின்னர் பரத்தை பைத்தியமாக பர்த்த சந்தியாவும் அவருடைய கணவரும் பரத்தை அவர்களுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்று பார்த்துக் கொள்கிறார்கள் இதுவே இந்த படத்தின் கதை.

மேலும் இந்த படத்தில் பரத்துடன் மெக்கானிக் செட்டில் வேலை புரியும் சிறு பையனின் நிலைமை என்னவென்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாமல் இருந்தது ஆனால் தற்போது அவர் ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது நீங்கள் ஏன் சினிமாவை விட்டு விலகி வந்தீர்கள் என்று அந்த பத்திரிகையாளர் கேட்க  அதற்கு அருண் அவர்கள் அதாவது அந்த படத்தில் சிறுவனாக நடித்த அருண் அவர்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக சினிமாவை விட்டு விலகியதாக கூறியுள்ளார்.

அந்த படத்தில் அவருடைய காமெடி பெரிய அளவில் பேசப்பட்டது. அது மட்டுமல்லாமல் அவர் டீ வாங்கிட்டு வரும் இப்போது உமிழ் நீரை துப்பும் காமெடி அது மட்டுமல்லாமல் அதுபோன்ற பல சேட்டை வேலைகளை  செய்து இருப்பார் இதனாலையே அருண் ஊரில் டீ வாங்கும்போது அவரைப் பார்த்தார்கள் என்றால் இதுதான் ஞாபகத்துக்கு வரும் என்று அவரிடம் கூறியுள்ளனர் என்றும் அருண் அவர்கள் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார்.

மேலும் அருண் அவர்கள் காதல் திரைப்படத்திற்கு பிறகு ஒரு சில திரைப்படத்தில் நடித்து உள்ளார். சினிமாவை விட்டு என் விலகி வந்தீர்கள் என்று கேட்டதற்கு குடும்பத்தில் சில பல பிரச்சனைகள் காரணமாக சினிமாவை விட்டு விலகிதாக கூறியுள்ளார் அது மட்டுமல்லாமல் அவருடைய அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவருடைய அப்பாவிற்கு கால் சரி இல்லாததாலும் பட வாய்ப்பு அதிகம் இல்லாததாலும் வேறு வழி இல்லாமல் சினிமாவை விட்டு விலகியதாக கூறியிருக்கிறார்.

arun
arun

அதன் பிறகு சினிமாவை விட்டு விலகி  அவருடைய நண்பர் மூலமாக ஒரு பர்னிச்சர் கடையில் வேலை செய்கிறார். பின்னர் கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக அந்த பர்னிச்சர் கடையில் வேலை செய்து அந்த வேலையையும் கற்றுக்கொண்டு தற்போது சொந்தமாக மதுரையில் ஒரு பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment