தல அஜித் நடிப்பில் பல திரைப்படங்கள் வெற்றி அடைந்துள்ளன அதேபோல் பல தோல்வி திரைப்படங்களும் வந்துள்ளது. தல அஜித் பல திரைப்படங்களை தவற விட்டு அதில் வேறொரு நடிகர்கள் நடித்து ஹிட் அடைந்துள்ளது அதேபோல் வேறொரு நடிகர் தவறவிட்ட அதில் அஜித் நடித்து ஹிட் அடைந்து திரைப்படம் இருக்கிறது.
அந்தவகையில் வேறொரு நடிகர் கமிட்டான திரைப்படத்தில் அஜித் நடித்து மரண ஹிட்டான திரைப்படம்தான் காதல் கோட்டை இந்த திரைப்படத்தை அகத்தியன் இயக்கியிருந்தார் 1996ஆம் ஆண்டு வெளியாகிய இந்த திரைப்படத்தில் அஜித் தேவயானி, ஹீரா ஆகியோர்கள் நடித்திருந்தார்கள்.
அஜித் திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது இந்த காதல் கோட்டை. இந்த திரைப்படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் யார் என்று தெரிந்தால் தூக்கி வாரிப் போடும். அஜித்திற்கு ஜோடியாக இந்த திரைப்படத்தில் தேவயானி நடித்திருப்பார்.
அஜித் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கோலங்கள் சீரியலில் தேவயானி கணவராக நடித்த அபிஷேக் என்பவர்தான். நடிகர் அபிஷேக் கோலங்கள் சீரியலில் பாஸ்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார். ஆனால் கோலங்கள் சீரியலுக்கு அதற்கு முன் பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.
அபிஷேக் தான் காதல் கோட்டை திரைப்படத்தில் முதன் முதலில் நடித்து வந்தார் கிட்டத்தட்ட பாதி திரைப்படங்கள் முடிவடைந்த நிலையில் சில பிரச்சனை காரணமாக அபிஷேக் அந்த திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார் அதன்பிறகுதான் நடிகர் அஜித்தை வைத்து மீண்டும் முழு படத்தையும் இயக்கினார் அகத்தியன்.

படம் வெளியாகி மரண ஹிட்டடித்தது. அதேபோல் இந்த திரைப்படத்தில் தேவயானி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது அஞ்சு அரவிந்த் தான். அவர் அருணாச்சலம் திரைப்படத்தில் ரஜினிக்கு தங்கையாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததால் அஜீத்துடன் நடிக்கும் வாய்ப்பை உதறித் தள்ளி விட்டார்.
இப்படி காதல் கோட்டை திரைப்படத்தில் பல நடிகர் மற்றும் நடிகைகள் வெறுத்து ஒதுக்கினாலும் அந்த திரைப்படத்தில் அஜித் நடித்து மெகா ஹிட் ஆகி அஜித் திரைப்பயணத்தை தலைகீழாகப் புரட்டிப் போட்டது.

