14 வயதில் கடல் திரைப்படத்தில் நடித்த ராதாவின் மகளா இது.! என்ன அடையாளமே தெரியாமல் இப்படி மாறிட்டாங்க.

0
kadal
kadal

80-களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ராதா இவருக்கு கார்த்திகா, துளசி நாயர் என இரு மகள்கள் இருக்கிறார்கள், கோ திரைப்படத்தில் கதாநாயகியாக  நடித்திருந்தார் கார்த்திகா, அதேபோல் துளசி நாயர் சினிமா துறையில் 2013 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கிய கடல் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

தனது முதல் திரைப்படம் கடல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதில் மிகவும் பிரபலம் அடைந்தார், அதுமட்டுமில்லாமல் அந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அறிமுக நடிகை என்ற விருதும் கிடைத்தது, இதனை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு கே சந்திரன் இயக்கிய ‘யான்’ திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப் படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ஆனால் இந்த திரைப்படம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை, கடல் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது துளசி நாயருக்கு 14 வயதுதான், 14 வயதிலேயே சினிமாவில் நடிக்க வந்தார் என்பதை யாராலும் நம்ப முடியாது, ஏனென்றால் அவரின் நடிப்பும் அழகும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

சினிமாவில் என்ட்ரி கொடுத்த உடனே இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் அமைந்ததால் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் அடுத்தடுத்து இரண்டு திரைப்படங்களும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு வரவேற்பு கிடைக்காததால் தனது படிப்பைத் தொடர மும்பை சென்றார், தற்பொழுது தனது மேற்படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக போடர் இன்டர்நேஷனல் ஸ்கூல்லில் படித்து வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு மீண்டும் சினிமாவில் நடிக்க திட்டமிட்டுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது, இந்த நிலையில் தனது நண்பர்களுடன் துளசி நாயர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் துளசி நாயரை பார்த்து ஆச்சரியத்தில் இருக்கிறார்கள் ரசிகர்கள். ஏனென்றால் துளசி நாயர் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார்.

இதோ அவரின் புகைப்படம்.

thulasi-nair
thulasi-nair