காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை பார்த்த முன்னணி நடிகர் – வெளிவந்த முதல் விமர்சனம்.!

நயன்தாராவின் காதலன் விக்னேஷ் சிவன் சினிமா உலகில் இயக்குனராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டு இருந்தாலும் அதன் பின் இவர் பல்வேறு முயற்சிகளை எடுத்து சினிமா உலகில் வளர்ந்துள்ளார். தமிழ் சினிமாவில் இயக்குவதையும் தாண்டி தயாரிப்பாளராகவும், பாடகராகவும் தன்னை வெளிக்காட்டிக் கொண்டு ஓடி வருகிறார்.

இதுவரை இயக்குனர் விக்னேஷ் சிவன்  தானா சேர்ந்த கூட்டம், நானும் ரௌடி தான், போடா போடி போன்ற சிறப்பான படங்களை எடுத்து அசத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது இப்பொழுதுகூட இயக்குனர் விக்னேஷ் சிவன் நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி ஆகியோர்களை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார்.

இந்த திரைப்படம் நாளை கோலாகலமாக வெளியாக இருக்கிறது இந்த திரைப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 62 வது திரைப்படத்தையும் விக்னேஷ் சிவன் தான் இயக்கவுள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்கள் முதலில் எதிர்பார்ப்பது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தான்.

ஏனென்றால் இந்த படத்தில் இருந்து இதுவரை வெளிவந்த அப்டேட்டுகள் அனைத்துமே சிறப்பாக இருந்ததால் படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட இருக்கிறது இந்த சூழலில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தைப் பார்த்துவிட்டு சில கருத்துக்களைக் கூறி உள்ளார்.

அதில் அவர் சமீபத்தில் வெளிவந்த திரைப்படங்களில் காமெடி கலந்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று சிறப்பாக இருக்கிறது. அதேசமயம் ரொமான்டிக்கும் இந்த படத்தில் இருக்கிறதாம். மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு போன் செய்து பாராட்டியும் உள்ளாராம் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Comment