காப்பான் மொக்க படம் எனக்கு கூறியவர்களுக்கு தரமான பதிலடி கொடுத்த படக்குழு.! இது எப்படி

0

கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள திரைப்படம் காப்பான் என்ற திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து மோகன்லால், ஆர்யா, சாயிஷா ஆகியோர் நடித்திருந்தார்கள். சமீபத்தில் வெளியாகிய இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படம் அனைவரையும் கவர்ந்தது என்று தெரியவில்லை ஆனால் சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்த நிலையில் காப்பான் திரைப்படம் வெளியானதிலிருந்து இதை தாறுமாறாக விமர்சனம் செய்து வந்தவர்கள் பலர். இவர்கள் எதற்காக இவ்வாறு விமர்சனம் செய்தார்கள் என்று தெரியவில்லை.

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக காப்பான் படக்குழு தரப்பில் இருந்து வசூல் குறித்து தகவல் தற்போது வெளியிட்டுள்ளார்கள், இந்த திரைப்படம் தமிழகத்திலேயே 43 கோடி வரை வசூல் செய்துள்ளது அதுமட்டுமில்லாமல் உலகம் முழுவதும் 83 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.