காப்பான் திரைவிமர்சனம்.!

0
kaappaan-movie
kaappaan-movie

நடிகர் சூர்யா நீண்டகாலமாக ரசிகர்களுக்கு ஒரு பெரிய வெற்றிப் படத்தைக் கொடுக்க வேண்டும் என போராடி வருகிறார், அந்த வகையில் தனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த கேவி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது இதை ரசிகர்கள் எதிர்பார்த்தபடி வெற்றி பெற்றதா இல்லையா என்பதை பார்க்கலாம்.

படத்தின் கதை

படத்தின் ஆரம்பத்திலிருந்து நாட்டின் பிரதமராக இருக்கும் மோகன்லாலை கொலை செய்ய திட்டம் தீட்டுகிறது ஒரு கும்பல், அதேபோல் சூர்யாவும் சில மோசமான வேலைகளை செய்து வருகிறார், ஆனால் சூர்யா செய்யும்  நாச வேலைகள் அனைத்தும் மோகன்லாலை காப்பாற்ற செய்கிறார் என்பதுதான் உண்மை, ஏனென்றால் சூர்யா ஒரு ரகசிய உளவாளி என தெரியவருகிறது.

அதன் பிறகு சூர்யா பிரதமரின் பாதுகாப்பு பிரிவில் சேருகிறார் அதனைத் தொடர்ந்து பிரதமரின் உயிருக்கு பலரும் குறிவைக்கிறார்கள் அந்தக் குறியிலிருந்து சூர்யா எப்படி மோகன்லாலை காப்பாற்றுகிறார், இந்த நாச வேலைகளை யார் செய்கிறார் பிரதமரை கொள்ள யார் துடிக்கிறார் என்பது தான் மீதிக்கதை. மீண்டும் அவர் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

காப்பான் திரைப்படத்தில் சூர்யா இஸ் பேக் என்றுதான் கூறவேண்டும், ஏனென்றால் ஒன் மேன் ஷோ தான் சூர்யா, படம் முழுக்க பிரதமரை காப்பாற்றும் ஆபீஸராக துருதுருவென இருக்கிறார், அவருக்கு ஏற்ற கதாபாத்திரம் போல் அமைந்து விட்டது, மோகன்லாலின் நடிப்பு நிகழ்காலப் பிரதமரை நமது கண்முன் நிறுத்துகிறது என்னதான் இந்திய உணர்வு என்ற வசனம் பேசினாலும் பாகிஸ்தான் மக்களுக்காகவும் அவர் பேசும் காட்சி அனைவரையும் கைதட்ட வைத்துவிட்டது.

அதேபோல் சாயிஷாவின் காட்சிகள் அனைத்தும் ஏதோ பார்வையாளர்களை திசை திருப்புவதற்காக திணிக்கப்பட்ட தெரிகிறது அது பெரிதும் கை கொடுக்கவில்லை, ஆனால் ஆர்யாவின் காட்சி ஜாலி தான் அவருக்கு எப்பொழுதும் ஜாலியான கதாபாத்திரம் தான் செட் ஆகும் என்பதை அறிந்த இயக்குனர், ஜாலியான கதாபாத்திரத்தை கொடுத்துவிட்டார் போமன் ராணியிடம் அவர் அடிக்கும் கவுண்டர் அனைத்தும் ரசிக்க வைக்கிறது.

அதேபோல் வில்லன் நடிகராக வரும் வட இந்தியா ஆல் துப்பாக்கி வித்யூத் ஜமால் போல் மிரட்டுகிறார், கேவி ஆனந்த் படம் என்றாலே மீடியா பயோகெமிஸ்ட்ரி இது போல் ஏதாவது ஒரு விஷயம் உள்ளே இருக்கும், அந்த வகையில் இந்த திரைப்படத்தில் சிலிப்ரா  என்ற பூச்சி இனத்தை காட்டி பிரமிக்க வைத்துள்ளார் அது விவசாய நிலத்தை ஆக்கிரமிப்பு செய்யும் காட்சிகள் மிகவும் அற்புதமாக காட்டியுள்ளார் இயக்குனர்.

ஆனால் என்ன விவசாயிகளை காப்பற்றுவதை விட தமிழ் சினிமாவில் இருந்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றுதான் தெரிகிறது, ஏனென்றால் விவசாயம் சார்ந்த காட்சிகள் அனைத்து வசனங்களும் அப்படிதான் இருக்கிறது. அதே போல் கே வி ஆனந்த் திரைப்படம் என்றாலே ஏதாவது ட்விஸ்ட் இருந்து கொண்டே இருக்கும் ஆனால் இந்த திரைப்படத்தில் அனைத்துமே நேரடியாக தெரிவதால் எந்த ஒரு பெரிய டிவிஸ்ட்வும் இல்லை.

படத்தில் சில லாஜிக் குறைகள் இருந்தாலும் கடைசி வரை அற்புதமாக கொண்டு சென்றுள்ளார், அதுமட்டுமில்லாமல் படம் முழுக்க தமிழ் மட்டும்தான், சமீபகாலமாக ஹிந்தியை இந்திய மொழியாக மாற்ற வேண்டும் என துடித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும், கே வி ஆனந்த் காப்பான் திரைப்படத்தைப் பார்த்தால் ஒருவேளை மாறி விடுவார்களோ என்னவோ. ஏனென்றால் இந்த திரைப்படம் முழுக்க முழுக்க தமிழில் தான் பேசிக் கொள்கிறார்கள், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஏன் பாகிஸ்தான் எம்பஸ்ஸி ஆள் கூட தமிழில் தான் பேசுகிறார்.

படத்தின் ஒளிப்பதிவு பற்றி சொல்ல வேண்டும் என்றால் ஒரே வார்த்தையில் அர்புதம் என்று சொல்லலாம் ஏனென்றால் காஷ்மீரில் லண்டன் என பல பகுதிகளை மிகவும் கலர்ஃபுல்லாக காட்டியுள்ளார்கள், பாடல்கள் கொஞ்சம் சொதப்பல் தான் ஹேரிஸ் ஜயராஜ் என்னாச்சு அவருக்கு என கேட்கும் அளவுக்கு இருக்கிறது.

தனி ஒரு மனிதனாக சூர்யா ரவுண்ட் கட்டி அடித்துள்ளார், அதேபோல் மோகன்லாலுக்கு பெரிய கதாபாத்திரம் இல்லை என்றாலும் மிகவும் டீசண்டான கதாபாத்திரம் அசால்டாக செய்துவிட்டார், சண்டை காட்சிகள் மற்றும் ட்ரெயின் ஸ்டாண்ட் என அனைத்தும் எடுத்த விதம் அற்புதம்.

படத்தை சலிப்பு தட்டாமல் பார்க்கலாம் என்றாலும் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம், அதுமட்டுமில்லாமல் பெரிதாக படத்தில் எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை, மொத்தத்தில் காப்பான் சூர்யா ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்.

காப்பான் : 3/5