காப்பான் படத்தின் கதை இந்த டாப் ஹீரோ தான் நடிக்க வேண்டியது.! மேடையிலேயே அறிவித்த சூர்யா

0
suriya
suriya

கே.வி ஆனந்த் ஒரு தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர், இவர் முதன் முதலில் 2005 ஆம் ஆண்டு கனா கண்டேன் என்ற திரைப்படத்தை இயக்கினார், அதன்பிறகு அயன், கோ, மாற்றான், அனேகன், கவண் என சில திரைப்படங்களை இயக்கியுள்ளார், தற்பொழுது இவர் சூர்யா மற்றும் மோகன்லால் வைத்து காப்பான் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படத்தை வருகின்ற வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் இதன் ப்ரோமோஷன் பணிகள் மிகவும் மும்முரமாக நடைபெற்று வருகிறது, சமீபத்தில் சூர்யா பேசுகையில் காப்பான் திரைப்படம் உண்மையில் 2012 ஆம் ஆண்டு ஒரு டாப் ஹீரோவுக்காக எழுதப்பட்ட கதை, அவர் அந்த கதையில் நடிக்க மறுத்ததால் தற்போது தனக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்தது என தெரிவித்தார்.

மேலும் அவர் பேசியதாவது என் திரைப்பயணத்தில் அயன் தான் சிறந்த படம் என இப்போதும் சொல்கிறார்கள், ஆனால் மாற்றம் படமும் என்னுடைய திரைப்பயணத்தில் மிக முக்கிய திரைப்படமாகும், கேவி ஆனந்த் எப்பொழுதும் என்னை வேறு விதமாக தான் திரையில் காட்ட பார்ப்பார் அதுமட்டுமில்லாமல் என்னிடமிருந்து பேஸ்டாக வெளிக்கொண்டு வருவார் இவ்வாறு கே வி ஆனந்த் பற்றி சூர்யா கூறினார்.