தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது அதேபோல் கேரளாவில் அதிக ரசிகர்களை கொண்ட தமிழ் சினிமா நடிகர் இவர்தான். இந்த நிலையில் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள காப்பான் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது.
சமீபகாலமாக சூர்யாவின் திரைப்படம் கடும் விமர்சனத்தை பெற்று வந்தது அனைவரும் அறிந்ததே அதனால், ஒரு மிகப்பெரிய ஹிட் கொடுக்க வேண்டும் என காத்துக் கொண்டிருக்கிறார் சூர்யா. இந்தநிலையில் காப்பன் திரையிட்ட பல திரையரங்குகளில் ஹவுஸ்புல்லாக ஓடிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவிலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது காப்பான் திரைப்படம், இந்தநிலையில் ரசிகர்களின் பேராதரவை பெற்றுள்ள காப்பான் திரைப்படத்தை பற்றி மூதாட்டி ஒருவர் படத்திற்கு விமர்சனம் செய்துள்ளார்
அதில் அவர் கூறியிருப்பது நடிகர் சூர்யா எல்லோர் உடன் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். சூப்பராக நடிச்சிருக்காரு எனக்கு இந்த படம் ரொம்ப பிடிச்சிருக்கு என்று இந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
89 yr old Amma is probably Surya’s okdest fan. See the way she narrates Kaappan story to me, asking me to watch it. Lol. Semma review in a nurshell. @Suriya_offl @LycaProductions pic.twitter.com/UmcAMKDmuG
— Subhasree Thanikacha (@itissubhasree) September 21, 2019