முக்கிய இடத்தில் முதல் நாள் வசூலில் NGK வசூலை முறியடித்த காப்பான்.!

0
Suriya-in-Kaappaan
Suriya-in-Kaappaan

சூர்யா, சாயிஷா, ஆர்யா மோகன்லால் நடிப்பில் கேவி ஆனந்த் இயக்கத்தில் வெளியாகிய திரைப்படம் காப்பான், இந்த திரைப்படம் நேற்று பல திரையரங்குகளில் வெளியானது, அதேபோல் சூர்யாவின் திரை பயணத்தில் தமிழகத்தில் அதிக திரையரங்குகளில் வெளியான திரைப்படமாக காப்பான் அமைந்துள்ளது.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது. ஆனால், சூர்யா ரசிகர்களுக்கு இந்த படம் நீண்ட வருடங்களுக்கு பிறகு கொஞ்சம் பிடித்த படமாக தான் அமைந்துள்ளது.

அதிலும் கேரளாவில் மிக குறைந்த திரையரங்குகளில் தான் வெளிவந்தது, அப்படியிருந்தும் இப்படத்திற்கு, சுமார் ரூ 1.2 கோடி வரை இப்படம் முதல் நாள் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், சூர்யாவின் என் ஜி கே அங்கு ரூ 46 லட்சம் தான் முதல் நாள் வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.