நடிகை ஜோதிகா 1978ஆம் ஆண்டு மும்பையில் பிறந்தவர் இவர் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார் இவரின் முழுப்பெயர் ஜோதிகா சாதனா. தமிழ் தெலுங்கு ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவரின் சகோதரி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நக்மா தான் இவர் 2006ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி சூர்யாவை திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு தியா என்ற பெண் குழந்தையும் தேவ் என்ற ஆண் குழந்தையும் இருக்கிறது. 1999 ஆம் ஆண்டு வாலி என்ற திரைப்படத்தின் மூலம் அஜித்தின் திரைப்படத்தில் அறிமுகமானார் அதனைத்தொடர்ந்து பூவெல்லாம் கேட்டுப்பார் சிநேகிதியே, முகவரி, உயிரிலே கலந்தது, ரிதம், குஷி, தெனாலி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
இவர் நடிப்பில் பல திரைப்படங்கள் வெளியாகி வெற்றி பெற்றுள்ளன அதிலும் சூர்யாவுடன் நடித்த சில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. சூர்யா ஜோதிகா காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் காதலை சூர்யா அவரின் அப்பா சிவகுமார் அவர்களிடம் கூறியபொழுது உனக்கு ஒரு தங்கை இருக்கிறார் அவருக்கு திருமணம் முடித்துவிட்டு பிறகு பார்த்துக் கொள்ளலாம் என கூறினாராம்.

அதன் பிறகு சூரியா ஆறு வருடங்களாக காத்திருந்து தங்கைக்கு திருமணம் முடித்த பிறகுதான் திருமணம் செய்து கொண்டார். பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் சமூக வலைத் தளத்தை பயன்படுத்தி பிரபலம் அடைந்து வருகிறார்கள் அதிலும் இன்ஸ்டகிரம் சமூக வலை தளத்தை பயன்படுத்தி புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் புதிதாக இணைந்துள்ள ஜோதிகா அவர்களின் முதல் புகைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது.
