Ponmagal vandhal : நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, அதனால் திரையரங்கம் படப்பிடிப்பு என அனைத்தும் தடை பெற்றுள்ளது. திரையரங்கு திறக்கப்படாததால் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்கள் கடனில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் அப்படியே திரையரங்கை தற்பொழுது ஓபன் செய்தாலும் சிறிய படத்துக்கு திரையரங்கு கிடைப்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கிறது, அதனால் படத்தை OTT இல் ரிலீஸ் செய்ய பட தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளார்கள்.
OTT யில் திரைப்படத்தை ரிலிஸ் செய்வதால் திரையரங்கு மூடப்படும் நிலைமை வந்துவிடும் என திரையரங்க உரிமையாளர்கள் யோசிக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் தமிழ் சினிமாவே கார்ப்பரேட் நிறுவனத்திடம் சென்று விடும் அதன் பிறகு ரசிகர்கள் கொண்டாட முடியாது அனைவரும் திரைப்படத்தை OTT யில் பார்க்கும் நிலை ஏற்பட்டுவிடும்.
இப்படியிருக்க திரையரங்க உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் படத்தை OTT யில் ஒளிபரப்பக் கூடாது என தீர்மானத்துடன் இருந்தார்கள் இந்த நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனத்தை வைத்து தன்னுடைய மனைவி ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள்வந்தாள் திரைப்படத்தை OTT தளத்திற்கு விற்றார்.
இந்த தகவல் தயாரிப்பாளர்கள் மத்தியிலும் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியிலும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது அதனால் சூர்யா மற்றும் ஜோதிகா திரைப்படத்தை திரையரங்கில் திரையிடக்கூடாது என முடிவெடுத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

இப்படி சர்ச்சை இருக்கும் நேரத்தில் பொன்மகள்வந்தாள் திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது அமேசன் பிரைம், பொன்மகள் வந்தாள் திரைப்படம் மே மாதம் 29ஆம் தேதி விரைவில் வெளியிடப்படும் என அறிவித்துள்ளார்கள்.
அதேபோல் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்து வந்த பென்குயின் திரைப்படமும் முடிந்து விட்டதால் இந்த திரைப்படத்தையும் கார்த்திக் சுப்புராஜ் அமேசானுக்கு விட்டுவிட்டார், இந்த திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் 19ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார்கள்.
