விஜய்யை நம்ப வைத்து ஏமாற்றிய ஜோதிகா.? நெருப்பை கக்கிய தளபதி.. சூர்யா போட்ட அதிரடி கண்டிஷன்..!

vijay latest
vijay latest

ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை ஜோதிகா இவர் விஜயிடம் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். பின்பு சில்லுனு ஒரு காதல் சூர்யாவுடன் நடித்திருந்தார் அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டு இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகு ஜோதிகா படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

பின்பு ஜோதிகா சூர்யா தம்பதிகளுக்கு மகன் மற்றும் மகள் இருக்கிறார்கள் இந்த நிலையில் இருவரும் வளர்ந்து விட்டதால் மீண்டும் ஜோதிகா சினிமாவில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அதிலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதேபோல் ஜோதிகா நடிக்கும் சில திரைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்று வருகிறது.

இந்த நிலையில் மெர்சல் திரைப்படத்தில் ஜோதிகாவை நடிக்க வைப்பதற்காக அட்லி கேட்டுள்ளார் ஆனால் அதற்கு ஜோதிகா மறுத்துள்ளார். இதற்கு காரணம் பல காரணங்கள் கூறப்பட்ட நிலையில் சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் அது குறித்து சில விஷயங்களை  கூறியுள்ளார். அட்லி ஜோதிகாவை நடிக்க வைப்பதற்கு கேட்டதால் அவர் மறுத்துள்ளார் அந்த தகவல் விஜய்யை மிகவும் பாதித்துள்ளது.

அதனால் விஜய் இனிமேல் ஜோதிகாவுடன் நடிக்க முடியாது எனவும் கூறியுள்ளார். என்ன காரணம் என்று கேட்டு சமாதானம் செய்யக்கூட ஒத்துவரவில்லை விஜய். சிறிது காலம் நடித்துவிட்டு பின்பு நடிக்க முடியாது எனக் கூறுவது வரமுறையே கிடையாது என பைல்வன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது ஜோதிகா இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஆனால் இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்கு மாமனார் இடைஞ்சலாக இருப்பதாக நினைத்து ஜோதிகா மும்பையிலேயே செட்டில் ஆகியுள்ளார் அது மட்டும் இல்லாமல் சூர்யா இந்தி திரைப்படத்தில் நடிப்பதற்கு ஆசை இருப்பதால் மும்பையில் பங்களாவுடன் ஒரு கோடிக்கு மேல் காரையும் வாங்கி அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.

இதனால் நடிகர் சிவகுமார் சூர்யாவின் அப்பா மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ரஜினி மற்றும் கமலுடன் நடிப்பதற்கு ஜோதிகா இன்னும் தயாராகவில்லை என்றும் தெரிவித்துள்ளார் என்னதான் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தாலும் கமலஹாசன் உடன் ஜோதிகா நடிக்க கூடாது என சூர்யா கண்டிஷன் போட்டுள்ளதாக  பைல்வன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.