சகோதரி நக்மாவுடன் திருமண விழாவில் கலந்துக் கொண்ட ஜோதிகா.! வைரலாகும் புகைப்படம்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஜோதிகா தொடர்ந்து கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்பொழுது பிரபல முன்னணி நடிகருக்கு ஜோடியாக ரொமான்டிக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதாவது தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி திரைவுலகிலும் பிரபல நடிகைகளில் ஒருவராக நடிகை ஜோதிகா விளங்கி வருகிறார்.

ஹிந்தி திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு தமிழில் அஜித்துடன் இணைந்து வாலி திரைப்படத்தின் நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பினை பெற்றது தற்பொழுது நடிகை ஜோதிகா ஸ்ரீ என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் பிரபல முன்னணி நடிகரான மம்முட்டிக்கு ஜோடியாக காதல் திரைப்படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீப காலங்களாக மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தினை ஜியோ பேபி இயக்குகிறார். இந்தப் படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

jothika 1
jothika 1

இவ்வாறு சினிமாவில் எந்த அளவிற்கு ஜோதிகா பிரபலமடைந்து உள்ளாரோ அதேபோல் இவருடைய சகோதரி நக்மாவும் பிரபலமான ஒருவர். இவர் காதலன், பாட்ஷா, லவ் பேர்ட்ஸ், சிட்டிசன் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னட, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

jothika 2
jothika 2

ஆனால் குறிப்பிட்ட வருடங்களாக சினிமாவில் இருந்து விலகி முழுவதுமாக அரசியலில் ஈடுபட்டு வரும் நிலையில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் நடிகை நக்மா தனது சகோதரி ஜோதிகாவுடன் குடும்பத் திருமண நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

jothika
jothika

Leave a Comment