இதுவரை மீடியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த ஜீவி பிரகாஷ் மனைவி மற்றும் மகளை பார்த்துள்ளீர்களா.! வைரலாகும் புகைப்படம்

gv prakash kumar wife and daughter : பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமானின் அக்கா மகன்தான் ஜிவி பிரகாஷ். இவர் திரையுலகில் நடிகர்,பாடகர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டுள்ளார்.இவர் ஒரு பேட்டியில் சினிமாவை என் உயிராக நினைத்து வேலை செய்கிறேன் என கூறியிருந்தார்.

சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற திரைப்படத்தின் பாடல் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான ஜிவி பிரகாஷ் தற்பொழுது வரை 12 ஆண்டுகளாக இசைப்பயணத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களை பாடியுள்ளார்.

தற்போது திரையுலகில் பிஸியாக இருந்து வருகிறார். அண்மையில் ஊடகங்களுக்கு பதில் தெரிவித்த இவர் என்னுடைய குடும்பமே சினிமா குடும்பம்தான் மூன்று வயதில் மாமா என்னை பாட வைத்த நிலையில் சினிமா என் உயிராக நினைத்து வேலை செய்கிறேன் இதனைத் தொடர்ந்து நான் நடிக்க தொடங்கும்போதே நடிப்பதற்கான பயிற்சிகளை எடுத்துக் கொண்டுதான் திரையுலகிற்கு வந்தேன் என கூரியிருந்தார்.

இவர் ஆரம்பத்தில் ஏ ஆர் ரகுமான் இசை குழுவில் பணியாற்றி வந்தார் அதன் பிறகு ஏ ஆர் ரகுமான் தவிர்த்து ஹாரிஸ் ஜெயராஜிடம் பணியாற்றி வந்தார். பின்னர் வசந்த பகவான் இயக்கிய வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜிவி பிரகாஷ். இவருடைய முதல் படத்திலேயே அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

saindhavi_prakash

குறுகிய காலத்தில் 50 படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளரும் இவர்தான் இசையமைப்பாளராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருகிறார். ஜிவி பிரகாஷ் தனது ஏராளமான படங்களில் பாடிய பின்னனி பாடகி சைந்தியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஜிவி பிரகாஷ் நடிக்கும் பெரும்பாலான படங்களில் இவரே இசையமைத்து வருகிறார் இவர் விஜய்யின் தீவிர ரசிகர் ஆவார்.அந்த வகையில் விஜயின் தெறி படத்தில் ஒரு பாடலை இவர் தான்    இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ஜிவி பிரகாஷ் திருமணமாகி ஐந்து வருடங்கள் ஆகிய நிலையில் தற்பொழுது பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தையின் புகைப்படத்தை சைந்தவி முதன்முறையாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

saindhavi_prakash

Leave a Comment

Exit mobile version