ஜீ.வி பிரகாஷ் தங்கை நடிக்கும் முதல் திரைப்படம்.! அட இதில் நம்ம ஆள் தான் ஹீரோவா.!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிவி பிரகாஷ். இவர் இசையமைப்பாளர்களில் உச்சத்தில் இருக்க்கும் ஏ. ஆர். ரகுமான் அவர்களின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது.வெயில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானார் ஜி.வி பிரகாஷ்.இப்படத்தில் அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இதன் மூலம் மக்களிடத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இதை தொடர்ந்து அவர் பல படங்களில் இசை அமைப்பாளராக பணியாற்றி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.ஜீ .வி.பிரகாஷ் இசையமைப்பாளராக மட்டுமில்லாமல், தயாரிப்பு, பின்னணி பாடகர், நடிகர் எனப் பன்முக தன்மை கொண்டவர். ஜீ.வி பிரகாஷின் தங்கை பவானி அவர்கள் படத்தில் நடிக்க போகிறார் என்ற தகவல் சமீபகாலமாக வெளியாகியிருந்தது.

பவானி அவர்களுக்கு இது முதல் படமாக இருந்தாலும் இதில் ஹீரோவாக நடிக்க உள்ள ஆனந்த ராம் அவர்கள் இதற்கு முன்பு மீசைய முறுக்கு என்ற திரைப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு தம்பியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பவானி அவர்கள் தற்பொழுது ஆனந்த ராம் அவர்களுடன் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

pics
pics

இந்தநிலையில் ஜீ.வி பிரகாஷின் தங்கையும், ஹிப்ஹாப் ஆதி மற்றும் ஆனந்த் ராம் இவர்கள் மூவரும் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளனர். இதனை பார்த்த ரசிகர்கள் இப்படத்தில் ஆதியும் நடிக்கிறார் என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

pics
pics

 

Leave a Comment