இரண்டு படம் நடிப்பதற்கு ஒரே ஒரு வெப் சீரிஸ் நடித்தாலே போதும்..! சரியான லாபம் பார்த்த பிரபலம்..!

தற்போதைய சினிமாவை காட்டிலும் ஓடிடி தளங்களில் ஒளிபரப்பாகும் தொடர்களின் மீது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது அந்த வகையில் திரைப்படங்களை விட வெப் தொடர்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைப்பது மட்டுமில்லாமல் தற்பொழுது முன்னணி பிரபலங்கள் கூட இது போன்ற தொடர்களில் நடிக்க அதிக அளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகை தமன்னா  நடிப்பில் வெளியான நவம்பர் ஸ்டோரி என்ற வெப் தொடர் மிக நல்ல வரவேற்பை பெற்றது மட்டும் இல்லாமல் இதனை தொடர்ந்து விமல் நடித்த விலங்கு எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான வதந்தி போன்ற தொடர்களும் நல்ல வரவேற்பு பெற்று தந்தது.

மேலும் இந்த வெப் தொடர்  மூலமாக இவர்கள் பிரபலமானது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்த வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்கள் இரண்டு மணி நேரம் வரும் சினிமாவை காட்டிலும் ஒரு மணி நேரம் ஒளிபரப்பாகும் இந்த வெப் தொடர்களை பார்க்கவே ரசிகர்கள் மிக ஆவலுடன் இருக்கிறார்கள் இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பரபரப்பு மற்றும் விறுவிறுப்பு ஆகியவை கடைசி வரை குறையாமல் இருப்பது தான்.

அதுமட்டுமில்லாமல் தற்பொழுது பல்வேறு இயக்குனர்களும் திரைப்படங்கள் இயக்குவதில் அதிக அளவு அலட்சியம் காட்டி வருவது அதிகரித்து வருகிறது அதனால் திரைப்படங்கள் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் பின்னர் தோல்வியை சந்தித்து வருகிறது இதை பார்க்கும் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சி ஏற்படுவது மட்டுமில்லாமல் இதன் விளைவாக வெப் தொடர்பக்கம்  பலரும் சாய்ந்து விடுகிறார்கள்.

மேலும் இந்த வெப் தொடர்பக்கம் அதிகளவு காசு பார்த்து வரும் ஒரு நடிகை என்றால் அவர் அஞ்சலி தான் அந்த வகையில் இவர் தற்பொழுது நடித்துள்ள fall வெப் தொடர் அனைவரையும் கவர்ந்தது மட்டுமில்லாமல் மிகவும் சஸ்பென்சாக இந்த தொடர் சென்று கொண்டிருக்கிறது மேலும் மூன்று படங்கள் நடித்தால் கூட இவரால் அந்த அளவுக்கு சம்பாதிக்க முடியுமா என்று தெரியவில்லை ஆனால் ஒரு தொடருக்கு அவருக்கு எக்கச்சக்க காசுகளை கொடுக்க முன் வருகிறார்கள் நமது இயக்குனர்கள்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment