மிரட்டலாக இருக்கும் ஜுராசிக் வேர்ல்ட் மூன்றாவது பாகம் எப்பொழுது ரிலீஸ் தெரியுமா.?

பொதுவாக சினிமா ரசிகர்கள் ஹாலிவுட் திரைப்படத்தை விரும்பி பார்ப்பார்கள் அதிலும் தொடர் திரைப்படங்களாக வரும் பல திரைப்படங்களை ரசிகர்கள் விரும்பி பார்ப்பார்கள் அந்த வகையில் ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி  பெற்றது.

இதன் முதல் பாகம் 2015 ஆம் ஆண்டும் இரண்டாவது பாகம் 2018 ஆம் ஆண்டும் வெளியாகி மாபெரும் ஹிட்டடித்தது இந்த நிலையில் தற்போது மூன்றாவது பாகம் கடந்த சில ஆண்டுகளாகவே தயாரிக்கப்பட்டு வருகிறது இது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் இந்த மூன்றாவது பாகத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

ஜுராசிக் வேர்ல்ட் திரைப்படத்தின் மூன்றாவது பாகமான ஜுராசிக் வேர்ல்ட் டாமினேஷன் என்ற திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை தற்போது வெளியிட்டுள்ளார்கள் அதாவது வருகின்ற ஜூன் 10ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது இந்த திரைப்படத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் இருக்கிறார்கள்.

மூன்றாவது பாகமான  ஜுராசிக் வேர்ல்ட் டாமினேஷன் திரைப்படத்தை 165 மில்லியன் அமெரிக்கன் டாலர்  பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளார்கள். இதற்கு முன் வெளியாகிய பாகங்களைப் போலவே இந்தப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் தத்துரூபமாக கிராபிக்ஸ் இருக்குமெனவும் மிரட்டலாக திரைப்படம் இருக்குமெனவும் தகவல் கிடைத்துள்ளது.

jurassic world 3
jurassic world 3
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment