இணையதளத்தில் பட்டையை கிளப்பும் ஜுமான்ஜி ட்ரைலர் இதோ.!

0

1995 இல் வெளியானது ஜுமான்ஜி முதல் பாகம். இந்த திரைப்படம் குழந்தைகள் பார்க்கும் படமாக அமைந்தது. எனினும் கடந்த 2017 இல் Jumanji: Welcome to the Jungle என இரண்டாவது பாகம் வெளியானது. இது அணைத்து தரப்பு மக்களும் பார்க்கும் படமாக அமைந்தது. இதன் தொடர்ச்சியாகவே மூன்றாம் பாகம் ரிலீசாகிறது.

சென்ற பாகம் – வீடியோ கேம்மில் சிக்கியவர்கள் வெளிய வந்த உடன் முடிந்தது. இந்த பார்ட்டில் தன் தாத்தா வீட்டில் வீடியோ கேம்மை, சரி செய்ய முயலும் சமயத்தில் சிக்கி விடுகிறான் ஸ்பென்சர். வழக்கம் போல தங்கள் நண்பனை காப்பாற்ற இவர்களும் கேம்மில் நுழைகின்றனர்.

எனினும் ட்விஸ்ட்டாக இம்முறை ஸ்பென்சரின் தாத்தா மற்றும் அவரின் நண்பரும் உள்ளே புக கலை கட்டுகிறது திரைக் கொண்டாட்டம். இப்படம் இந்தாண்டு டிசம்பர் 13 ரிலீசாகவுள்ளது.