நேற்றைய பிறந்தநாளுக்கு இன்று வாழ்த்து கூறி ரசிகர்களிடம் பல்ப் வாங்கிய ஜூலி.! மரணமாய் கலாய்க்கும் ரசிகர்கள்

0

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் தளபதி விஜய் இவருக்கு ஜூன் 22 பிறந்தநாள் என்பதால் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்து கூறி கொண்டாடினார்கள், அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பலரின் மனம் கவர்ந்த கவீனுக்கு நேற்று பிறந்தநாள் அதனால் விஜய் மற்றும் கவின் பிறந்தநாளை புதுபுது டாக் கிரியேட் செய்து சமூகவலைதளத்தில் டிரெண்டிங்கில் கொண்டு வந்தார்கள்.

விஜய் மற்றும் கவின் பிறந்தநாளை இவர்கள் இருவரின் ரசிகர்களும் வலைதளத்தில் வாழ்த்து மழை பொழிந்து வந்தார்கள், அதேபோல் நேற்று விஜய் மற்றும் கவிஞனுக்கு மட்டும் பிறந்தநாள் கிடையாது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்களில் ஒருவரான காஜல் பசுபதிக்கும் நேற்றுதான் பிறந்தநாள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

காஜல் பசுபதி கலந்துகொண்ட பிக் பாஸ் சீசன் போட்டியில் ஜூலியும் பங்கு பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும், ஓவியா போலவே ஜூலிக்கும் காஜலுக்கு முட்டிக்கொண்டது, ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி க்கு பிறகும் ஜூலி காஜல் பசுபதிஇடம் நட்பிலே தான் இருக்கிறார் இந்த நிலையில் காஜல் பசுபதிக்கு ஜூலி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

அதில் என்ன ஒரு வேடிக்கை என்றால் நேற்றைய பிறந்தநாளுக்கு ஜூலி இன்று காலை பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் இதனை பார்த்த சக ரசிகர்கள் ரொம்ப லேட் ஜூலி நேற்று பிறந்தநாளுக்கு இன்று வாழ்த்துக் கூறுகிறாய் என மரணமாகி கலாய்த்து வருகிறார்கள்.

ஜூலி இப்படி அடிக்கடி அசிங்கப்படுவது மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தீனி போடுவது போல்தான். ரசிகர்கள் மீம்ஸ் கிரியேட் செய்து தெரிக்கவிட்டு வருகிறார்கள்.