என்னமா ஜூலி நாட்டுல எவ்ளோ பிரச்சனை போகுது இது உனக்கு தேவையா.! ஜூலியை சகட்டுமேனிக்கு திட்டும் ரசிகர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜூலி, அதுமட்டுமில்லாமல் அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயர் எடுத்தவர், அதனால் ஜூலியை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினார்கள், அதன்பிறகு பிக்பாஸில் கலந்து கொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு செவிலியராக பணியாற்றி வந்தார், பிக்பாஸ்க்கு பிறகு செவிலியர் தொழிலை விட்டுவிட்டு சினிமா பக்கம் வந்து விட்டார், பிக்பாஸில் கலந்து கொண்டு பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ஜூலி தற்போது சினிமா வாய்ப்பு, ரியாலிட்டி ஷோ, விளம்பரங்களில் நடிப்பது என படு பிஸியாக இருக்கிறார்.

கடந்த முன்று ஆண்டுகள் முடிவாடைந்தாலும் இவர் மீது இருக்கும் வெறுப்பு மட்டும் இன்னமும் யாருக்கும் குறையவில்லை என்றே கூறவேண்டும். இந்நிலையில், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஜெனிலியா பேசும் அவ்ளோதானா வசனத்தை டிக் டாக் செய்து வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் “நாட்டுல என்ன பிரச்சனை போயிட்டு இருக்கு இது ரொம்ப முக்கியம் இப்ப தேவையா என கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் விமர்சித்தும் வருகின்றனர்.

 

Leave a Comment