வெறித்தனமான புகைப்படத்தை வெளியிட்ட ஜூலி.! கிழித்து தொங்கவிட்ட நெட்டிசன்கள்.! விடாமல் பதிலளித்த ஜூலி.

0

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தவர் ஜூலி, அதுமட்டுமில்லாமல் அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயர் எடுத்தவர், அதனால் ஜூலியை ஆஹா ஓஹோ என புகழ்ந்து தள்ளினார்கள், அதன்பிறகு பிக்பாஸில் கலந்து கொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு செவிலியராக பணியாற்றி வந்தார், பிக்பாஸ்க்கு பிறகு செவிலியர் தொழிலை விட்டுவிட்டு சினிமா பக்கம் வந்து விட்டார், பிக்பாஸில் கலந்து கொண்டு பல நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றாலும் ஜூலி தற்போது சினிமா வாய்ப்பு, ரியாலிட்டி ஷோ, விளம்பரங்களில் நடிப்பது என படு பிஸியாக இருக்கிறார்.

அதேபோல் ஜூலி என்ன செய்தாலும் அதனை அசிங்க படுத்துவதற்காக ஒரு பெரும் கூட்டம் காத்துக் கொண்டுதான் இருக்கிறது இதனால் மனமுடைந்த ஜூலி ஒரு வீடியோவை பதிவிட்டார் அந்த வீடியோவில் நான் என்ன தவறு செய்தேன் என்னை ஏன் அப்படி திட்டுகிறீர்கள். எப்பவோ நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக இன்னும் திட்டிக் கொண்டிருக்கிறீர்கள் என புலம்பினார்.

மேலும் ஜூலி பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு திரைப்படங்கள் பற்றி அறிவிக்க தொடங்கினார் அவர் கதாநாயகியாக நடிக்க ஆரம்பித்தார் ஆனால் இன்னும் ஒரு திரைப்படம் கூட திரைக்கு வரவில்லை, அவர் நடித்த டிரைலர் மற்றும் டீசர் யூடியூபில் வெளியானது.

இந்த இந்நிலையில் தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்து முடிந்து 3 ஆண்டுகள் முடிந்து விட்டன தற்போது ஜூலி ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், மேலும் மரியா ஜூலியானா என இருந்த பெயரை எம் ஜூலி என மாற்றியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் கழுவி ஊற்றுகிறார்கள், ஆனால் அவர்களுக்கு ஜூலியும் பொறுமையாக பதில் அளித்து வருகிறார்.

julie
julie