நீண்ட வருடத்திற்கு பிறகு பிக்பாஸ் போட்டியாளர்களை சந்தித்த ஜூலி.! மரணமாய் கலாய்த்த ரசிகர்கள்

0

உலகையே திரும்பி பார்க்கவைத்த மிகப்பெரிய ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமானவர் ஜூலி, இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் வீர தமிழச்சி என்ற பெயரை எடுத்தார் அதனால் இவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை ஒட்டுமொத்தமாகக் கெடுத்துக் கொண்டார் அதனால் இவர் மீது பல விமர்சனங்கள் எழுந்தது. ரசிகர்களோ இவரை இணையதளத்தில் வருத்த எடுத்தார்கள்.

அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு பட வாய்ப்பும் கிடைத்தது, அதுமட்டுமில்லாமல் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றவும் வாய்ப்பும் கிடைத்தது, மேலும் இவர் அடிக்கடி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்வார்.

அந்த வகையில் ஜூலி நீண்ட வருடத்திற்கு பிறகு சக போட்டியாளர்களான காஜல் மற்றும் காயத்ரியை சந்தித்து புகைப்படம் எடுத்து தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் வழக்கம் போல ஜூலியை கழுவி ஊற்றி வருகின்றனர் .