ஆத்தா. பக்கத்து வீட்டு கொடில திருடினியா.! ஜூலி ஆடையை பார்த்து ரசிகர்கள் கிண்டல்.!

0

தமிழகத்தில் நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் என்றால் அது ஜல்லிக்கட்டு போராட்டம் தான் இந்த போராட்டத்தின் மூலம் வீரத்தமிழச்சி என்று பெயரெடுத்தவர் ஜூலி, ஆனால் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டு தனக்கு இருந்த நல்ல பெயரை கெடுத்துக் கொண்டார், பிக்பாஸில் கலந்து கொண்ட பிறகு இவரின் பெயர் அப்படியே மாறி விட்டது.

பிக்பாஸில் இவர் அரங்கேற்றிய பல நாடகத்தால் இவரை ரசிகர்கள் வெறுக்க தொடங்கினார்கள் இவரைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் சமூகவலைதளத்தில் வறுத்து எடுக்க ஆரம்பித்தார்கள், ஆனால் ஜூலியோ இதைப்பற்றி கவலைப்படாமல் ரியாலிட்டி ஷோ சினிமா எனவும் பிஸியாக இருந்து வருகிறார்.

மேலும் பிக் பாஸ் ஜூலி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார், இவர் கடைசியாக விமல் நடித்த மன்னர் வகையறா என்ற திரைப்படத்தில் சில காட்சிகளில் வந்தார், அதுமட்டுமல்லாமல் இவர் கதாநாயகியாக இரண்டு திரைப்படங்களில் நடித்துள்ளார், இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை, இப்படியிருக்க அடுத்ததாக பிக்பாஸ் ஐஸ்வர்யா நடிக்க இருக்கும் பப்ஜி என்ற திரைப்படத்தில் கமிட்டாகி உள்ளார் ஜூலி.

ஜூலி சமூகவலைதளத்தில் அடிக்கடி புகைப் படத்தை வெளியிடுவது வழக்கம் ஆனால் அந்தப் புகைப்படத்தையும் ரசிகர்கள் கிண்டல் அடிப்பது வாடிக்கையாக வைத்துள்ளார்கள் இந்த நிலையில் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஜூலி இதைப்பார்த்த ரசிகர்கள் இது சுடிதாரா இல்லை புடவையா ஏதாவது ஒன்னு கட்டுங்க இப்படி மிக்ஸ் பண்ணாதீங்க என மரணமாய் கலாய்த்து வருகிறார்கள்.