ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமடைந்தவர் ஜூலி. இதன்மூலம் அவர் பிரபல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராகவும் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பங்குபெற்றும் பிரபலமடைந்தார். இந்த நிலையில் பிறபல தொலைக்காட்சியான விஜய் டிவி தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 1 கலந்துகொண்டு மேலும் பிரபலமடைந்தார்.
இதனையடுத்து அவர் தமிழ்த் திரையுலகில் ஒரு சில படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து அவர் சில காலங்களாக ஊடகங்களை விட்டு சற்று விலகி உள்ளார். மேலும் சமூகவலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஜூலி அவர்கள் அவ்வப்போது தனது க்யூட்டான புகைப் படங்களை வெளியிடுவது மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைத்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் இந்தியா முழுவதும் மிகப்பெரிய அச்சுறுத்தலை விளைவித்தது. எனவே இதனை தொடர்ந்து இந்திய அரசு நாடு முழுவதும் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. இத் தடை ஏப்ரல் 14 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கபடுகிறது. இந்த நிலையில் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வாங்க வெளிவரத் தொடங்கியுள்ளன. இதனால் அரசு விழிப்புணர்வு வீடியோக்கள் மூலம் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஜல்லிக்கட்டு நாயகி ஜூலி அவர்கள் கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் கூறியதாவது இந்தக் கொரோனா மிகப்பெரிய ஆபத்து தயவுசெய்து இதை யாரும் சாதாரணமாக நினைக்காதீர்கள். இதை நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து தான் தடுக்க முடியும் ஒன்று சேர்ந்தால் என்றால் கைகோர்த்து அல்ல தனித்தனியாக இருந்தால் போதும் தயவுசெய்து காய்கறி வாங்க போறேன் மசாலா வாங்க போறேன் என்று கடைக்கு அடிக்கடி போகாதீர்கள் கடைக்குச் சென்றால் மூன்று நான்கு நாட்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி வந்து விடுங்கள் முக்கியமாக மாஸ்க் அணிந்து செல்லுங்கள்.
அந்த மாஸ்க்கை 4 மணி நேரம் உபயோகித்து விட்டு பின் தூக்கி போடுவதற்கு முன் கழுவி தூக்கி போடுங்கள். நம் வீட்டிலிருக்கும் குழந்தைகள் அந்த மாஸ்க்கை எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அதனால் மிக கவனமாக இருங்கள் தங்களுடைய உயிரை கூட பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கும் நம் அரசு போலீஸ் அதிகாரிகள், டாக்டர், நர்ஸ் சுகாதாரத் துறையை சார்ந்தவர்கள், நமக்கு உதவி செய்யும் தன்னார்வலர்கள் என எல்லோருக்கும் நன்றி என குறிப்பிட்டிருந்தார்.
Please stay home stay safe… A big thanks to all the government servants helping us.. Especially to the fire service department also. @CMOTamilNadu @Vijayabaskarofl #CoronavirusOutbreakindia pic.twitter.com/AT7PThPC2m
— எம் ஜூலி (M JULEE) (@lianajohn28) April 5, 2020
How dare u ask me to die.. Harrasing me what do u get cheap behavior https://t.co/BVwV5x5thk
— எம் ஜூலி (M JULEE) (@lianajohn28) April 5, 2020
இந்த வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் இவ்வளவு கருத்தா பேசுறியே நாயே சாரி தாயி நீ ஒரு சிஸ்டர் தானே சர்வீசுக்கு கிளம்பலாம் இல்ல அப்படியாவது செத்து எங்களுக்கு நல்லது பன்னு வீர தமிழச்சி என்ற கமெண்ட் போட்டுள்ளார். அதை பார்த்த ஜூலி மிகவும் கோபமடைந்து என்ன தைரியமிருந்தால் செத்துப்போ என்று சொல்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை என்று கூறியிருந்தார் தற்பொழுது இந்த தகவல் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.