ராட்சசி திரைப்படத்தில் ஜோதிகாவை கல்யாணம் பண்ணிக்க நினைத்த அந்த சிறுவன் யார் என்று தெரியுமா..?

0

joythika ratchasi movie actor latest update: ஜோதிகா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த ராட்சசி என்ற திரைப்படத்தில் ஒரு சிறுவன் ஜோதிகாவை பார்த்து என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா..? என கேட்பார் இவ்வாறு அப்படி சொன்ன சிறுவனை பற்றி ஒரு  சுவாரஸ்யமான தகவலானது இணையத்தில் வெளியாகி உள்ளது.

பிரபல இயக்குனர் கௌதம் ராஜ் அவர்கள் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் ராட்சசி இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை ஜோதிகா நடித்து இருப்பார் இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா ஒரு பள்ளி ஆசிரியையாக பணியற்றிவருவார்.

இந்த திரைப்படத்தில் ஜோதிகாவை திருமணம் செய்து கொள்ள கேட்ட அந்த சிறுவன் யார் என்று தெரியுமா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரிகமப நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமான மாஸ்டர் கமலேஷ் தான். இவருக்கு தற்போது ஏழு வயது ஆகிறது ஆனால் கானா பாடல் பாடுவதில் மிகவும் சிறந்த வல்லமை பெற்றவர்.

அந்த வகையில் பல்வேறு தத்துவமான கானா பாடல்களை பாடுவது மட்டுமல்லாமல்  தன்னைவிட வயதில் மூத்தவர் எல்லோருடனும் இணைந்து பாடல் பாடியுள்ளார். அதுமட்டுமில்லாமல் ஜீவா மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான திருநாள் என்ற திரைப்படத்தில் கூட நயன்தாராவுக்கு முத்தம் கொடுக்கும் அந்த சிறுவனும் நமது கமலேஷ் தான்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய கமலேஷ் ராட்சசி திரைப்படத்தின் அனுபவத்தை கூறியபொழுது சூர்யா அவரிடம் என் பொண்டாட்டிய நீ லவ் பண்றேன்னு சொன்னியாமே நைட்டு ஃபுல்லா உன்ன பத்தி தான் பேசிகிட்டு இருக்காங்க என  சொன்னதாகவும் அதற்கு பதிலளித்த கமலேஷ் சொல்ல சொன்னாங்க அதனால் தான் சொல்கிறேன் என்று கூறினாராம்.

அதன்பிறகு கமலேஷ் பிறந்தநாளுக்கு நடிகை ஜோதிகா ரிமோட் கார் ஒன்றை பரிசாக கொடுத்தாராம். மேலும் அவருடைய பிறந்த நாளன்று  அங்குவந்த அனைவருக்குமே பிரியாணி வாங்கிக் கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

kamalesh
kamalesh