மகன் பிறந்ததும் ஜாய் கிரிஸில்டா கைக்கு வந்த அதிர்ஷ்டம்.. மேடம் உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருக்காங்க

மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக சில மாதங்களுக்கு முன்பு ஜாய் கிரிஸில்டா புகார் அளித்ததிலிருந்து இந்த விவகாரம் கோலிவுட்டின் ஹெட்லைன்ஸ்களில் ஒன்றாக மாறியது. பிரச்னை இன்னும் ஓயாத சூழலில் அவருக்கு ஆண் குழந்தையும் பிறந்துவிட்டது.

குழந்தைக்கு ராகா ரங்கராஜ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜாய் கிரிஸில்டாவின் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று ட்ரெண்டாகியிருக்கிறது.
இந்நிலையில் அவருக்கு விருது ஒன்று வழங்கப்பட்டிருக்கிறது.

அந்த விருதை ஏந்தியபடி புகைப்படத்தை பகிர்ந்திருக்கும் அவர், “ஒரு பெண்ணின் தைரியம் தான் அவளோட அடையாளம்” என்று குறிப்பிட்டு; தனக்கு ஆதரவாக இருக்கும் பலருக்கும் நன்றியும் தெரிவித்திருக்கிறார். இப்போது இந்தப் புகைப்படம் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளது.