சென்னை மக்களின் தண்ணீர் பிரச்சனை தீர்க்க ரயிலில் கொண்டுவரப்பட்ட தண்ணீர்.!

0
Jolarpet train
Jolarpet train

இந்தியா முழுவதும் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது, அதுவும் தமிழ்நாட்டில் வரலாறு காணாத அளவிற்கு தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது, இதனால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளார்கள், மேலும் பொது மக்கள் காலி குடங்களுடன் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, மழை நீரை சேகரிக்காமல் விட்டதால் நிலத்தடி நீரும் பெரிய அளவில் மக்களை ஏமாற்றி விட்டது.

அதனால் தற்போது மக்கள் ஆழ்துளை கிணறுகளை நம்பி தங்களது தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வருகிறார்கள், ஆனால் இது எவ்வளவு நாள் நீடிக்கும் என்று தெரியவில்ல, இந்த நிலையில் சென்னையில் உள்ள தண்ணீர் பிரச்சனையை தீர்க்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார், இதற்கான வேலைகள் படும் வேகமாக நடைபெற்று வந்தன 65 கோடி மதிப்பீட்டில் மேட்டு சக்கரம் குப்பத்தில் இருந்து  ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வரை குழாய்கள் அமைக்கப்பட்டன இதனையடுத்து சோதனை ஓட்டம் பார்க்கப்பட்டது.

சிறிது தண்ணீர் கசிததால் மீண்டும் அதை சரி செய்து இன்று காலை தண்ணீர் ரயில் நிலையம் வந்தடைந்தது அந்த தண்ணீரை ரயில்களில் நிரப்பி  காலை 7 மணிக்கு ஜோலார்பேட்டையில் இருந்து புறப்பட்டது, இந்த ரயிலை முக்கிய அதிகாரிகளை கொடியசைத்து அனுப்பி வைத்தார்கள், ஒரு ரயிலில் மட்டும் 27 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்பட்டுள்ளது சுமார் நாலு மணி நேரத்திற்குப் பிறகு தண்ணீர் எக்ஸ்பிரஸ் சென்னையை அடுத்து வில்லிவாக்கம் ரயில் நிலையத்தை வந்து சேர்ந்தது அங்கு மக்கள் அனைவரும் மலர்களைத் தூவி வரவேற்றார்கள்.

இதே போல் தினமும் ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்படும் என அறிவித்துள்ளார்கள் மேலும் ராஜஸ்தானில் இருந்து மேலும் ஒரு ரயிலில் தண்ணீர் கொண்டுவரப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது இதனால் சென்னை மக்களின் தண்ணீர் பஞ்சத்தை போக்க முடியும் என கூறுகிறார்கள்.