வேம்புலி பத்து பேரை அடிக்கிற ஆளா இருந்தாலும் குழந்தைகிட்ட குத்து வாங்கி தான் ஆகணும் – வைரலாகும் புகைப்படம்

John kokken : தமிழ் சினிமாவில் கவனிக்கப்படக்கூடிய  நடிகர்களின் ஒருவர் ஜான் கொக்கன். இவர் முதலில் படங்களில் வில்லனுக்கு அடியாளாக தான் நடித்து வந்தார். அப்படித்தான் அஜித்தின் வீரம் படத்தில் வில்லனுக்கு அடியாளாக நடித்திருப்பார் அப்பொழுது அஜித் உடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது அப்பொழுதே அஜித்.

இவருடைய திறமையை பார்த்து உனக்கு நிச்சயம் நல்ல எதிர்காலம் இருக்கே தொடர்ந்து நடி எனக் கூறியுள்ளார் அதன் பிறகு நல்ல நல்ல கதைய அம்சம் உள்ள படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடித்து வந்தார் அப்படித்தான் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரம் இவருக்கு கிடைத்தது.

இந்தப் படத்தில் ஆர்யாவை எதிர்த்து இவர் சண்டை போடும் காட்சிகள் இவருடைய சீன்கள் என ஒவ்வொன்றும் தரமாக இருந்ததால் ரசிகர்கள் வேம்புலி கதாபாத்திரத்தை தூக்கி வைத்து கொண்டாடினர் அதன் பிறகு இவரும் கவனிக்கப்படக்கூடிய ஒரு நடிகராக தென்பட்டார். சிறு இடைவெளிக்கு பிறகு அஜித்தின் துணிவு திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.

இவருடைய வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே இருந்தது. அதற்கு காரணம் அஜித் தான் எனக்கு ஊக்கம் கொடுத்தார். துணிவு பணத்தின் போது கூட என்னை கூப்பிட்டு உனக்கு நல்ல திறமை இருக்கிறது உனக்கு நிச்சயம் பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்கும் என கூறினார்.

அதுபோல துணிவு படம் முடிவதற்குள்ளேயே எனக்கு பாலிவுட்டில் ஒரு வாய்ப்பு கிடைத்தது கூறினார் அஜித் சொன்னது நடந்து விட்டது. அவர் திறமையானவர்களை கண்டறிந்த ஊக்குவித்து வருகிறார் என அஜித்தை பற்றி பெருமையாக பேசினார். இப்போ தனுஷின் கேப்டன் மில்லர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது மகனுடன் ஜான் கொக்கன் விளையாடும் புகைப்படங்கள் இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் என்னதான் வேம்புலியாக இருந்தாலும் தம் மகன் கிட்ட அடி வாங்கி தான் ஆக வேண்டும் எனக் கூறிய அந்த புகைப்படத்திற்கு கமெண்ட் எடுத்து லைக்குகளை தட்டி வீசி வருகின்றனர் இதோ நீங்களே பாருங்கள்.

John kokken
John kokken
John kokken
John kokken