துணிவு படத்தில் வில்லனாக நடிக்க “ஜான் கொக்கன்” வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா.? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த செய்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித்குமார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த  துணிவு திரைப்படம் முழுக்க முழுக்க பேங்க்கில் நடக்கும் குளறுபடிகளை அப்பட்டமாக காட்டியது. அதனால் என்னவோ இந்த படம் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் கைதட்டல் வாங்கி அதிக நாட்கள் ஓடியது.

அதுமட்டுமல்லாமல் பட்டி தொட்டி எங்கும் வசூலில் ருத்ரதாண்டவம் ஆடியது. இதுவரை மட்டுமே துணிவு படம் சுமார் 220 கோடிக்கு மேல் உலக அளவில் வசூல் செய்துள்ளது அதனை தொடர்ந்து netflix OTT தளத்திலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று அசத்தி வருகிறது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித்  லைகா தயாரிப்பு நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து..

தனது 62 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார் இந்த படம் மிகப்பெரிய ஒரு ஆக்சன் பேக் திரைப்படமாக இயக்குனர் மகிழ் திருமேனி  இயக்கி உள்ளாராம். வெகு விரைவிலேயே ஷூட்டிங் தொடங்கப்பட இருக்கிறதாம். அதற்கு முன்பாக நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணி போய்க்கொண்டிருக்கிறது.

குறிப்பாக அஜித்துக்கு ஜோடியை தேர்வு செய்யப் படக்குழு தீவிரம் காட்டி வருகிறது ஏற்கனவே த்ரிஷா, நயன்தாரா என பல பெயர்கள் அடிபட்டு வந்த நிலையில் தற்போது நடிகை காஜல் அகர்வாலை நடிக்க வைக்க படக்குழு திட்டம் போட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படி ஏகே 62 திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளி வருகின்றன.

இந்த நிலையில் துணிவு திரைப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடித்து மக்கள் மனதில் கைத்தட்டல் வாங்கிய ஜான் கொக்கேன். துணிவு படத்தில் நடிக்க எவ்வளவு  சம்பளம் வாங்கி நடித்தார் என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதன்படி துணிவு  வில்லனாக நடிக்க ஜான் கோக்கேன் சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment