சினிமாவில் தன் நடிப்பால் மிகபெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் நடிகர் ஜோதிகா. இவர் சமீபத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் அதிலும் குறிப்பாக ஜாக்பாட், ராட்சசி, தம்பி ,நாச்சியார் போன்ற படங்களாகும் மற்றும் இதுபோன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ஜோதிகா அவர்கள் ஒரு படத்தில் கமிட்டாகி உள்ளதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதனை நிரூபிக்கும் வகையில் படக்குழுவினர் நேற்று மாலை 6 மணிக்கு அளவில் இப்படத்தின் ‘பொன்மகள் வந்தாள்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். அவரது ரசிகர்கள் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்து மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.
ஜோதிகா அவர்களின் சிறப்பு என்னவென்றால் எந்த ஒரு வேடங்கள் கொடுத்தாலும் தனது சிறந்த நடிப்பின் மூலம் அதற்கு உயிர் கொடுப்பவர்.இந்த நிலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும்போது ஜோதிகா அவர்கள் வக்கீல் கேரக்டரில் நடிப்பார் என தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
இதனை பார்த்த அவரது ரசிகர்கள் இப்படத்தில் அவர் ஜோதிகா அவர்கள் பல கேரக்டர் சிறப்பாக நடித்து வந்த இவர் இதுபோன்ற புதுவித கேரக்டரில் நடிப்பது மிகப்பெரிய ஒரு விருந்தாக இருக்கும் என அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர் பார்த்து வருகின்றனர்.
An intense thriller coming your way #PMVWorldwideMarch27th #PonmagalVandhalFL ??⚖#Jyotika #KBhagyaraj @rparthiepan #Thiagarajan #PratapPothen #Pandiarajan @Suriya_offl @fredrickji @rajsekarpandian@SakthiFilmFctry @ramji_ragebe1 @govind_vasantha @AntonyLRuben @proyuvraaj pic.twitter.com/T7r2cgjZ33
— 2D Entertainment (@2D_ENTPVTLTD) March 2, 2020
இந்தப் படத்தை அவரது கணவரான நடிகர் சூர்யா அவர்களின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தை ஜேஜே ஃப்ரெட்ரிக் இருக்கிறார். இப்படத்தில் பார்த்திபன், பாக்கியராஜ் மற்றும் பல முக்கிய கதாபாத்திரத்தில் முன்ன நடிக்க உள்ளனர்.இப்படம் முழுக்க முழுக்க திரில்லர் கதை கொண்ட இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இப்படம் மார்ச் 27ஆம் தேதியன்று வெளியாகும் என பர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.