மாதவனுடன் ஜெய ஜெய திரைப்படத்தில் நடித்த நடிகை தற்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா.!

0

90 காலகட்டத்தில் ரசிகர்களால் சாக்லேட் பாய் என்று அழைக்கப்பட்டவர் நடிகர் மாதவன். பொதுவாக நடிகருக்கு ஆன் ரசிகர்களும் பெண் ரசிகர்களும் அதிகம் இருப்பார்கள் ஆனால் நடிகர் மாதவனுக்கு பெண் ரசிகர்கள் தான் அதிகம். நடிகர் மாதவன் சினிமா உலகிற்கு முதன்முதலில் ஹிந்தி திரை படத்தில் தான் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கன்னட திரைப்படத்தில் நடித்து வந்தார்.

தமிழில் முதன்முதலாக 2000 ஆண்டு வெளியாகிய அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார் இந்த திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சிறந்த தென்னிந்திய அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருதை தட்டிச் சென்றார். இதனைத்தொடர்ந்து என்னவளே, மின்னலே டும்டும்டும், பார்த்தாலே பரவசம், என தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்தார்.

அதுமட்டுமில்லாமல் கன்னத்தில் முத்தமிட்டால், ரன், அன்பே சிவம், நளதமயந்தி லேசா லேசா, பிரியமான தோழி என தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்தார் இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஜேஜே  இந்த திரைப்படம் 2003 ஆம் ஆண்டு வெளியானது. அதேபோல் இந்த திரைப்படத்தை சரவணா அவர்கள் இயக்கியிருந்தார் மாதவனுடன் இணைந்து பூஜா, பிரியங்கா கோத்தாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்த பிரியங்கா கோத்தாரி ஹிந்தி சினிமா மூலம் முதன் முதலாக அறிமுகமானார். அதன் பிறகு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து நடித்து வந்தார்  அதுமட்டுமில்லாமல் சர்ச்சை இயக்குனர் ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் வெளியாகிய ஜேம்ஸ் என்ற 18 ப்ளஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தின் மூலம் இவர் மிகவும் பிரபலம் அடைந்தார்.

priyanka-kothari
priyanka-kothari

ஆனால் இந்த திரைப்படத்திற்கு பிறகு பெரிதாக எந்த ஒரு திரைப்பட வாய்ப்பும் கிடைக்காமல் இருந்து வந்தது அதனால் 2010ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளியாகிய கச்சேரி ஆரம்பம் திரைப்படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆடினார் மேலும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவிற்கு முழுக்கு போட்டு விட்டு டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்தநிலையில் பிரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது இதில் அடையாளமே தெரியாம அளவிற்கு பிரியங்கா மாறியுள்ளார் இதொ அவரின் புகைப்படம்.

priyanka
priyanka